எஸ். ராமகிருஷ்ணன் (க்ரியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எஸ். ராமகிருஷ்ணன் முன்னோடித் தமிழ்ப் பதிப்பாளர் ஆவார். தமது க்ரியா பதிப்பகம் மூலம் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி உள்ளிட்ட முக்கியமான பல நூல்களைப் பதிப்பித்துள்ளார். சோதனை முயற்சிகள், செம்மையாக்கம், புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துதல் முதலானவற்றில் இவர் காட்டிவரும் ஈடுபாடு, பங்களிப்பு காரணமாக தமிழ்ப் பதிப்புத்துறையின் ஒரு முன்னோடியாகக் கருதப்படுகிறார். கூத்துப்பட்டறை, மொழி அறக்கட்டளை, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் ஆகியவற்றின் உருவாக்கத்திலும் பங்குவகித்திருக்கிறார். ஆர்.கே.சுவாமி விளம்பர நிறுவனத்தில் சில காலம் பணியாற்றியிருக்கிறார்[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. சமஸ் (நவம்பர் 6, 2013). "மாற்றத்தின் வித்தகர்கள்". தி இந்து (தமிழ்). பார்த்த நாள் ஆகத்து 20, 2015.