எஸ். முத்துக்குமாரன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எஸ். முத்துக்குமாரன் | |
---|---|
![]() சாமித்தம்பி முத்துக்குமாரன் | |
பிறப்பு | முத்துக்குமாரன் மார்ச் 14, 1938 துறைநீலாவணை, மட்டக்களப்பு, இலங்கை |
இருப்பிடம் | கல்லடி |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
சமயம் | சைவம் |
வாழ்க்கைத் துணை | தேவலெட்சுமி |
ஓய்வு பெற்ற உதவிப் பதிவாளர் நாயகமான எஸ். முத்துக்குமாரன் அவர்கள் ஈழத்தைச் சேர்ந்த வானொலி, மேடைநாடாகாசிரியராகவும் எழுத்தாளராகவும் உள்ள சமகாலத்தவராகும். இவர் சமகால எழுத்தாளரான சைவப் புலவர். எஸ். தில்லைநாதன் அவர்களின் மூத்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]மட்டக்களப்பு மாவட்டத்தில் துறைநீலாவணையில் சாமித்தம்பி, மாரிமுத்து தம்பதிகளுக்கு மூத்த மகனாக 1938-03-14 இல் பிறந்தார். மண்டூரை புகுந்தகமாகவும், கல்லடியைத் தற்போது வசிப்பிடமாகவும் கொண்டுள்ளார்.
அரச பணி
[தொகு]அரச சேவையில் 1958 ஆம் ஆண்டு இணைந்து பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் உதவிப் பதிவாளர் நாயகமாகப் பதவி வகித்து 1998 இல் ஓய்வு பெற்றார்.
இலக்கியப் பணி
[தொகு]1961 ஆண்டு முதல் வானொலி நாடக எழுத்தாளராக படைப்புத்துறைக்குள் நுழைந்தார். சமயம் இலக்கியம் சம்பந்தமான நாடகங்களையே இவர் எழுதி வந்துள்ளார். இவரது ஆக்கங்கள் சொந்தப் பெயரிலும், சுகீர்தரன் என்னும் புனை பெயரிலும் வெளிவந்தன.
கட்டுரைகள்
[தொகு]- கன்னித் தமிழ்-சனவரி 1961 இல் கலைமுரசு என்னும் பத்திரிகையில் வெளியாகியது
- துணைநீலாவணையில் கண்ணகியம்மன் திருவிழாக் குன்றின் மீது அதிசயக் காட்சி 1963-06-25 இல் தினகரனில் வெளியானது.
சிறுகதைகள்
[தொகு]- இதுதான் விதியா:1963-05-19 இல் வீரகேசரியில் வெளியானது.
- நீங்காத நினைவுகள்:1966-12-31 இல் ராதா எனும் பத்திரிகையில் வெளியானது.
- நூன சித்தி:பெப்ரவரி 1962 இல் கலை முரசு எனும் பத்திரிகையில் வெளியானது.
நூல்கள்
[தொகு]வானொலியில் வெளியான நாடகங்களைத் தொகுத்து வீரவில்லாளி எனும் நாடகப் புத்தகம் 2008 வெளியானது.
மேடை நாடகம்
[தொகு]நாரதர் விளைத்த கலகம் எனும் கம்சரம்மானை இலக்கியத்திலுண்டான பகுதி நாடகமாக 1964-11-03 இல் தினகரனில் வெளியாகியது.
விருதுகள்
[தொகு]- றோட்டரிக் கழகத்தினால் 1998 ஆம் ஈண்டில் சிறந்த மக்கள் சேவைக்கான விருது
- 2008ஆம் ஆண்டு அரச சாகித்திய நாடகள இலக்கியத்திற்கான விருதுச் சான்றிதழ்
- 2009ஆம் ஆண்டு மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தினால் தமிழியல் விருது
- 2011 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் கலாபூசணம் விருது.
வானொலியில் ஒலிபரப்பான நாடகங்கள்
[தொகு]தலைப்பு | இலக்கியம் | ஒலிபரப்பான திகதி |
---|---|---|
வீரவில்லாளி | மகாபாரதம் | 1961-03-23 |
வண்ணமகள் | மகாபாரதம் | 1962-05-03 |
தூது சென்ற காவலன் | நளவெண்பா | 1962-10-18 |
கலியின் வினை | நளவெண்பா | 1963-01-17 |
சிவக்குழந்தை | பெரியபுராணம் | 1964-10-22 |
பூதகி | கம்சரம்மானை (பாரதம்) | 1964-12-03 |
உருத்திராக்கப் பூனை | புனைகதை | 1965-12-22 |
நான் பிரம்மரிஷி | கௌசிகமுனி கதை (இராமாயணம்) | 1966-10-23 |
தோழி நீ வாழ்க! | குறுந்தொகை | 1968-10-06 |
பரி ஏறிய பரமன் | திருவாதவூரடிகள் புராணம் | 1969-11-15 |