உள்ளடக்கத்துக்குச் செல்

எஸ். மாலதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். மாலதி
தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலாளர்
பதவியில்
1 செப்டம்பர் 2010 – 16 மே 2011
முன்னையவர்கே. எஸ். ஶ்ரீபதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1954
தஞ்சாவூர், தமிழ்நாடு இந்தியா
இறப்பு25 மார்ச் 2012 (அகவை 57)
தேனாம்பேட்டை, சென்னை, தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
பெற்றோர்சுவாமிநாதன்
இராஜம்
கல்விஇ. ஆ. ப
இணையத்தளம்தமிழ்நாடு தலைமைச் செயலகம்

எஸ். மாலதி (S. Malathi) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். 1977-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான இவர், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளராகப் பணியாற்றியவர்.[1][2]

வாழக்கைக் குறிப்புகள்

[தொகு]

இவர் 1954-ஆம் ஆண்டு தஞ்சாவூரில் பிறந்தார். இவரின் தந்தை சுவாமிநாதன் கர்நாடகத்தில், தொலைத் தொடர்புத்துறையில் உயர் பதவியில் இருந்தவர். அங்கு வசித்ததால் இவருக்குத் தமிழ், ஆங்கிலம், கன்னடம் நன்றாகத் தெரியும். அதேபோல இந்தியிலும் புலமை பெற்றவர்.

கல்வி

[தொகு]

இவர் விலங்கியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். பிரிட்டனில் நிதி குறித்த பட்டயப் படிப்பைப் படித்தார்.

அரசுப் பணிகள்

[தொகு]

1977 ஆம் ஆண்டில் தமிழகப் பிரிவு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகப் பணியில் இணைந்தார்.திருச்சியில் உதவி ஆட்சியராகத் தனது பணியைத் தொடங்கினார். 1987-ஆம் ஆண்டில் வேலூர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றினார். உள்துறைச் செயலாளர் உள்பட பல்வேறு முக்கியத் துறைகளில் பணியாற்றிய இவர் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த கே. எஸ். ஶ்ரீபதி பணி ஓய்வு பெற்றதை அடுத்து, தமிழகத்தின் 39-ஆவது தலைமைச் செயலாளராக 2010 செப்டம்பர் 1 அன்று பொறுப்பேற்றார். 2011 மே 16 அன்று பணியில் பதவியில் இருந்து மாற்றப்பட்டு, புள்ளியியல் துறை ஆணையராக நியமிக்கப்பட்டார்.[3]

மறைவு

[தொகு]

2003-ஆம் ஆண்டு முதல் மார்பகப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையிலும் சிகிச்சையுடன் பணியையும் தொடர்ந்தார். அவரது பதவிக்காலம் 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை இருந்த நிலையில், 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டார்.தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் புற்றுநோய்க்குத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த இவர் தனது 57-ஆவது அகவையில் 2012 மார்ச் 25 அன்று காலை 9.45 மணியளவில் சிகிச்சை பலனின்றிக் காலமானார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Malathi, new Chief Secretary. The Hindu. 31 Aug 2010.{{cite book}}: CS1 maint: year (link)
  2. ↑ புதிய தலைமைச் செயலர் மாலதி. தினமணி நாளிதழ். 20 செப்டம்பர் 2012. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
  3. ↑ தமிழக தலைமைச் செயலர் எஸ்.மாலதி மாற்றம்!. விகடன் இதழ். 16 மே 11. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
  4. ↑ Former Chief Secretary Malathi succumbs to cancer. The Hindu. 25 March 2012.{{cite book}}: CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._மாலதி&oldid=4555113" இலிருந்து மீள்விக்கப்பட்டது