எஸ். பி. நிம்பல்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். பி. நிம்பல்கர்
பிறப்புமும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணியோகக் கலை குரு
அறியப்படுவதுயோகா
விருதுகள்பத்மசிறீ
வலைத்தளம்
Website of Yoga Vidya Niketan

சதாசிவ் பிரஹ்லாத் நிம்பல்கர் (Sadashiv Prahlad Nimbalkar) ஒரு இந்திய கல்வியாளரும், எழுத்தாளரும், யோகா குருவும் மற்றும் மும்பையைச் சேர்ந்த யோகா வித்யா நிகேதன் நிறுவனரும் ஆவார். இவர்யோகா பயிற்சியை ஊக்குவிப்பவராகவும், அதற்காக பிரச்சாரம் செய்பவராகவும் உள்ளார்.[1] முன்னாள் உடற்கல்வி பயிற்றுவிப்பாளரும், ஜூனியர் கல்லூரியின் துணை அதிபருமான நிம்பல்கர், புகழ்பெற்ற ஆசிரியரான, யோகா ஆராய்ச்சியின் முன்னோடிகளில் ஒருவரும் கைவல்யாதாம யோகா நிறுவனத்தின் நிறுவனர் சுவாமி குவலயானந்தாவின் கீழ் யோகா பயிற்சி மேற்கொண்டார். நிம்பல்கர் நிறுவிய யோகா வித்யா நிகேதன், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு யோக அறிவியல் பட்டயப்படிப்பு, ஆசிரியர் பயிற்சி பாடநெறிகள், யோகா சிகிச்சையில் பட்டயப்படிப்பு மற்றும் இயற்கை வாழ்க்கை மற்றும் இயற்கை மருத்துவத்தில் பட்டயப்படிப்பு போன்ற பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

நிம்பல்கர் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.[2] மேலும், ஆரோக்யசதி யோகா[3] பிராணயாமா[4] மற்றும் ஸ்வஸ்திய கே லியே யோகா ஆகிய மூன்று புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவர் பிரிஹன் மகாராஷ்டிர யோகா பரிஷத்தின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ளார்.[5] இந்தியா மற்றும் அமெரிக்காவில் பல பயிற்சி அமர்வுகளை நடத்தியுள்ளார்.[6][1] யோகாவை பிரபலப்படுத்துவதில் இவர் செய்த பங்களிப்பிற்காக 2004ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு குடிமக்களுக்கான இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த கெளரவமான பத்மசிறீ விருதினை வழங்கியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "In Conversation With Dr. Nimbalkar". Lokvani. 25 January 2005. பார்க்கப்பட்ட நாள் 27 November 2015.
  2. Dynamic Suryanamaskar: Sun Salutations. Litent. 2014. பக். 300. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788192504209. https://books.google.com/books?id=NDRGAwAAQBAJ&q=S+P+Nimbalkar+yoga+guru&pg=PT194. பார்த்த நாள்: 27 November 2015. 
  3. S. P. Nimbalkar (2009). Aarogyasathi Yoga. Yoga Vidya Niketan. பக். 271. 
  4. S. P. Nimbalkar (2003). Pranayama. Star Publishers. http://www.starpublic.com/index.php?p=sr&Uc=HB-14441. 
  5. "Advisory Board". Brihan Maharashtra Yoga Parishad. 2015. Archived from the original on 8 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 27 November 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Shanmukhananda hall renamed". Times of India. 29 December 2000. பார்க்கப்பட்ட நாள் 27 November 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._பி._நிம்பல்கர்&oldid=3546384" இலிருந்து மீள்விக்கப்பட்டது