எஸ். பி. சற்குணா பாண்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சர்குண பாண்டியன் (Sarguna Pandian) என்பவர் ஒரு தமிழக பெண் அரசியல்வாதியாவார்.தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்தவர் சற்குணபாண்டியன். திமுக மேடைகளில் இளம் பேச்சாளராக அறிமுகமானார்.இவர் தி.மு.கவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்தவர்.[1][2][3] இவர் சமூகநலத்துறை அமைச்சராக 1996 தேர்தலுக்குப்பின்[4] அமைந்த புதிய அரசில் இருந்தார். இவர் தி.மு.க. சார்பில் தமிழ சட்டமன்றத்துக்கு இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் இருந்து 1989, மற்றும் 1996 ஆண்டு தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5][6]

வகித்த பொறுப்புகள்[தொகு]

திமுகவில் மகளிர் அணி துணை செயலாளர், மாநில செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் போன்ற பொறுப்புகளை வகித்தார். மகளிர் ஆணையத்தின் தலைவராகவும், பொறுப்பு வகித்த அவர் இறக்கும் வரை துணை பொதுச்செயலாளராக இருந்தார். [7]

இறப்பு[தொகு]

இதய அறுவை சிகிச்சை செய்த அவர் கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் 13 ஆகத்து 2016 அன்று அதிகாலை 3.30 மணியளவில் சற்குணபாண்டியன் காலமானார். [7]


மேற்கோள்கள்[தொகு]