எஸ். நடராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எஸ். நடராஜா (இறப்பு: அக்டோபர் 5, 2013) இலங்கைத் தமிழ் ஊடகவியலாளரும், பத்திரிகையாளரும் ஆவார். இவர் வீரகேசரி பத்திரிகையில் பிரதம ஆசிரியராகப் பணியாற்றியவர்.

யாழ்ப்பாணம் கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட நடராஜா கரவெட்டி விக்னேசுவரா கல்லூரியில் கல்வி கற்றவர். 1950களில் வீரகேசரியில் விளம்பரப் பிரிவில் தனது பத்திரிகைப் பணியை ஆரம்பித்தார். 1963 இல் உதவி ஆசிரியரானார். 1984ஆம் ஆண்டு செய்தியாசிரியராக நியமிக்கப்பட்டார். அன்றைய காலகட்டத்தில் ஈழப்போர் முனைப்புப் பெறத் தொடங்கியிருந்தது. அவ்வேளையில் போர்ச் செய்திகளைத் திரட்டி, வீரகேசரியில் வெளியிடுவதற்கு நிருபர்களைத் தொடர்பு கொண்டு ஊக்கப்படுத்தினார். 1996ஆம் ஆண்டு வீரகேசரியின் பிரதம ஆசிரியராக நியமிக்கப்பட்டார். எஸ்.என்.ஆர்.ஜா. என்ற பெயரில், கட்டுரைகளையும் இவர் எழுதி வந்திருக்கிறார்.

மறைவு[தொகு]

நடராஜா தனது 78ஆவது வயதில் சிறிது கால நோய்க்குப் பின் 2013 அக்டோபர் 5 இல் காலமானார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._நடராஜா&oldid=2712640" இருந்து மீள்விக்கப்பட்டது