எஸ். நடராஜசிவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எஸ். நடராஜசிவம், திரைப்படத்தில்

எஸ். நடராஜசிவம் இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவர். திறமை வாய்ந்த வானொலி, தொலைக்காட்சி, திரைப்பட, மேடை நடிகருமாவார். தற்போது தனியார் வானொலி நிலையம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

வானொலியில்[தொகு]

" ஒதெல்லோ", "நத்தையும் ஆமையும்" முதலான பல வானொலி நாடகங்களில் நடித்ததோடு, ஒலிச்சித்திரங்களிலும் பங்குபற்றியிருக்கிறார்.

மேடை நாடகங்கள்[தொகு]

ஏராளமான மேடை நாடகங்களில் நடித்தவர்

 • 'Those who sow thw wind' (காற்றை விதைதவர்கள்) - ஆங்கில நாடகம்

தொலைக்காட்சியில்[தொகு]

ரூபவாகினியில் தயாரிக்கப்பட்ட முதலாவது தொலைக்காட்சி நாடகம் என்ற பெருமையைப்பெற்ற, கலாநிதி ஜே. ஜெயமோகன் எழுதிய 'கற்பனைகள் கலைவதில்லை' என்ற நாடகத்தில் கதாநாயகனாக நடித்தவர். தொடர்ந்து பல சிங்களத் தொடர் நாடகங்களில் நடித்தவர்.

 • 'லாஹிரு தகசக் - ரூபவாஹினியில் சிங்களத் தொடர்நாடகம் (1985)
 • 'யசோராவய' - சிங்களத் தொடர் நாடகம்
 • 'அவசந்த' - சிங்களத் தொடர் நாடகம்
 • 'வனஸபந்து - சிங்களத் தொடர்நாடகம்
 • 'யுக விலக்துவ' - சிங்களத் தொடர் நாடகம்
 • தென்னிந்திய நடிகை ராதிகா தயாரித்த, மனோபாலா இயக்கிய 'மீண்டும் மீண்டும் நான்'

திரைப்படங்களில்[தொகு]

 • இந்தியக் கலைஞர்களும் இணந்து நடித்த பாதை மாறிய பருவங்கள்
 • புலம் பெயர்ந்தவர்களால் இலங்கையில் தயாரிக்கப்பட்ட 'காதல் கடிதம்'
 • 'திரிசூல' - சிங்களத் திரைப்படம்
 • 'யுக கினிமத்த' - சிங்களத் திரைப்படம்
 • 'திகவி' - சிங்களத்திரைப்படம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._நடராஜசிவம்&oldid=2712698" இருந்து மீள்விக்கப்பட்டது