எஸ். டி. செல்ல பாண்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். டி. செல்ல பாண்டியன் (S. T. Chellapandian) ஓர் தமிழக அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழகச் சட்டபேரவை உறுப்பினராக 2011 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர்.[2] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியைச் சார்ந்தவர்.

2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அதே தொகுதியில் போட்டியிட்டு கீதா ஜீவனிடம் தோல்வியுற்றார்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011" (PDF). தமிழக அரசு விவரத் தொகுப்பு அகராதி. Archived from the original (PDF) on 2013-04-02. பார்க்கப்பட்ட நாள் 2011-12-10.
  2. "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு. Archived from the original on 2011-08-25. பார்க்கப்பட்ட நாள் 2011-12-10.
  3. "Thoothukudi (Tamil Nadu) Election Results 2016". Infobase. பார்க்கப்பட்ட நாள் 2017-05-02.
  4. "15th Assembly Members". Government of Tamil Nadu. Archived from the original on 2017-03-13. பார்க்கப்பட்ட நாள் 2017-05-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._டி._செல்ல_பாண்டியன்&oldid=3546354" இலிருந்து மீள்விக்கப்பட்டது