எஸ். ஜே. ஸ்டாலின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எஸ்.ஜெறி ஸ்ராலின்
பிறப்புஅக்டோபர் 30, 1983 (1983-10-30) (அகவை 37)
பிறப்பிடம்யாழ்ப்பாணம், இலங்கை
இசை வடிவங்கள்இசைத்தொகுப்பு, பின்னணி இசை
தொழில்(கள்)இசையமைப்பாளர், இசை தயாரிப்பாளர், இசை இயக்குனர், பாடகர், இசைக்கருவி இசைப்பவர்
இசைக்கருவி(கள்)Electronic keyboards, தனிப்பாடல், ஆர்மோனியம்
இணையதளம்அதிகாரபூர்வ இணையத் தளம்

எஸ்.ஜெறி ஸ்ராலின் (S.Jerry Stalin, பிறப்பு: அக்டோபர் 30, 1983) இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இசையமைப்பாளர், மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் யாழ்ப்பாணம் புனித ஜோண் பொஸ்கோ மற்றும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் கல்வி கற்றவரும், தகவல் தொழிநுட்பத்துறையில் தேர்ச்சி பெற்ற, கணினி மென்பொருள் பொறியாளருமாவார். கீபோட் வாத்திய கலைஞராக ஆரம்பகாலங்களில் இசையமைப்பு மற்றும் ஒலிப்பதிவு பொறியியலில் கொண்ட ஆர்வம், மேடை நாடகங்கள், இசைத்தொகுப்புக்கள், தொலைக்காட்சி நாடகங்கள், விழிப்புணர்வு பாடல்கள், வானொலி நிலையக் குறியிசைகள் போன்றவற்றுடன் அறிமுகமானார். 2007 ஆண்டில் மலர்களுக்காய் மனம் நிறைவாய் எனும் முதலாவது இசைத்தொகுப்பு மற்றும் வென்றவன் எனும் காணொலிப் பாடலுடன் அறிமுகமானவர். 2012 ஜனவரி 01 இல் வெளிவந்த இவரது தமிழ் கொலைவெறி (யாழ்ப்பாணப் பதிப்பு) பலராலும் அறியும் வண்ணம் இணையத்தளங்களில் பிரபலமாகி வொய் திஸ் கொலவெறி டி பாடலுக்கு முற்றிலும் தமிழ் பாடல்வரிகளை கொண்ட எதிர்ப்பாட்டு எனப் ஊடகங்களில் பேசப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஜே._ஸ்டாலின்&oldid=2633238" இருந்து மீள்விக்கப்பட்டது