எஸ். ஜி. வாசுதேவ்
எஸ். ஜி. வாசுதேவ் | |
|---|---|
பெங்களூரின் தேசியக் கலைக்கூடத்தில் எஸ். ஜி. வாசுதேவ் | |
| பிறப்பு | எஸ். ஜி. வாசுதேவ் 1941 (அகவை 84–85)[1] மைசூர், மைசூர் அரசு, பிரித்தானிய இந்தியா (தற்போதைய மைசூர், கருநாடகம், இந்தியா) |
| பெற்றோர் | எஸ். கே. கோபால் மற்ரும் இரத்னம்மாள் |
| வாழ்க்கைத் துணை |
|
| வலைத்தளம் | |
| www | |
எஸ். ஜி. வாசுதேவ் (S. G. Vasudev) (பிறப்பு 1941 [1][2]) சோழமண்டல ஓவியர்கள் கிராமத்தின் [3] நீண்டகால நிறுவன உறுப்பினர் ஆவார். அங்குதான் சென்னை கலை இயக்கத்திற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது.[4][5] கருநாடகாவின் மிக முக்கியமான நவீனத்துவ ஓவியர்களில் ஒருவரான வாசுதேவ், பென்சில் வரைபடங்கள், எண்ணெய் ஓவியங்கள், பட்டு நாடாக்கள், செப்பு புடைப்புச் சிற்பங்கள் மற்றும் படத்தொகுப்புகள் உள்ளிட்ட ஊடகங்களில் பணியாற்றி, வரி மற்றும் வண்ணங்களைப் பயன்படுத்துவதற்காக தேசிய மற்றும் சர்வதேச அளவில் அறியப்பட்டவர்.[5] பெங்களூரில் உள்ள தேசிய நவீன கலைக்கூடம், இவரது 50 ஆண்டுகளுக்கும் மேலான பணி வாழ்க்கையைப் பற்றிய ஒரு பின்னோக்கிப் பார்வையை செப்டம்பர் 2018 இல் வழங்கியது.[6]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]வாசுதேவ் 1941 ஆம் ஆண்டில் மைசூரில்[7] எஸ். கே. கோபால் மற்றும் இரத்னம்மாள் ஆகியோருக்கு பிறந்தார்.[8] கலை விமர்சகர் ஜி. வெங்கடாசலம் என்பவர் இவரை கலைப் பள்ளியில் சேர ஊக்குவித்தார். பின்னர், சென்னை, அரசு கவின்கலைக் கல்லூரியில் சேர்ந்து ஓவியத்தைக் கற்றார்.[2][6]
மாணவராக இருந்தபோது, வாசுதேவுக்கு 1964 ஆம் ஆண்டில் இந்திய அரசிடமிருந்து தேசிய உதவித்தொகை வழங்கப்பட்டது. 1967 ஆம் இவருக்கு இந்தியாவின் தேசிய கலை அகாதமியால் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான லலித் கலா அகாதமி விருதும் வழங்கப்பட்டது.[2]
சென்னையில் படிக்கும்போது வாசுதேவ் கே. சி. எஸ். பணிக்கரால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். ஓவியத்திலிருந்து பத்திக் மற்றும் மட்பாண்டங்கள் வரை பல்வேறு வடிவங்களைப் படிக்க மாணவர்களை ஊக்குவித்த பணிக்கர், 1966 ஆம் ஆண்டில் சோழமண்டல ஓவியர்கள் கிராமத்தை நிறுவி, கலை மற்றும் கைவினைப்பொருட்கள் இரண்டையும் சேர்ந்த கலையைக் கற்பித்தார்.[9][10]
பணிகள்
[தொகு]வாசுதேவ், சோழமண்டல ஓவியர்கள் கிராமத்தின் நிறுவன உறுப்பினராக உள்ளார். அங்கேயே தங்கி இருபது ஆண்டுகள் பணியாற்றினார். கிரீஷ் கர்னாட் போன்ற பலருடன் வாழ்நாள் முழுவதும் நட்புடன் இருக்கிறார்.[11] இந்த ஓவியர்களின் சமூகம் கடற்கரைக்கு அருகில் மரங்கள் அடங்கிய கிராமப்புறமாக இருந்தது.[3][12] அங்குதான் வாசுதேவ் காட்சி கலைஞர் அர்னவாஸ் என்பவரை மணந்தார்.[5] 1988 ஆம் ஆண்டில் அர்னவாஸ் இறந்த பிறகு கிரீஷ் கர்னாட் அவரைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்தார்.[5]
தனது முதல் மனைவியின் மரணத்தைத் தொடர்ந்து, வாசுதேவ் தனது குடும்பத்துடன் பெங்களூரில் தங்கினார். அங்கு 1992 இல் பத்திரிகையாளர் அம்மு ஜோசப் என்பவரை மணந்தார்.[12] வாசுதேவின் அடுத்தடுத்த படைப்புகள் நகரத்தைப் பற்றிய சமூக அக்கறையை பிரதிபலிக்கின்றன. மக்களின் அரசியல், தத்துவம் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் அங்குள்ள கலாச்சாரம் மிகவும் மாறுபட்டது என்று வாசுதேவ் விவரித்துள்ளார்.[5][11]
கருநாடகாவின் மிக முக்கியமான ஓவியர்களில் ஒருவரான வாசுதேவ், தனது பென்சில் வரைபடங்கள், எண்ணெய் ஓவியங்கள், பட்டு நாடாக்கள், செப்பு புடைப்புச் சிற்பங்கள் மற்றும் படத்தொகுப்புகள் ஆகியவற்றிற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். நெசவாளர் கே, சுப்பராயலு போன்ற தலைசிறந்த கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.[13] கோவிட்-19 பெருந்தொற்றின் போது, வாசுதேவ் படத்தொகுப்பு, வரைகலைகள் மற்றும் கருத்தோவியங்களுடன் பரிசோதனை செய்யத் தொடங்கினார்.
படைப்புகள்
[தொகு]இவரது படைப்புகள் சில நேரங்களில் தெளிவற்ற வடிவங்களை கூர்மையான கோடுகளுடன் இணைத்து அவற்றை வரைவதற்கும், நிறம் மற்றும் அமைப்பு இரண்டையும் பயன்படுத்துவதற்கும் பெயர் பெற்றவை.[8] வாசுதேவ் தனது ஓவிய செயல்முறையை கருநாடக இசை உள்ள இராகம் தானம் பல்லவி செயல்முறையுடன் ஒப்பிட்டுள்ளார்: வெள்ளை நிறமியுடன் (இராகம்) தொடங்கி, வண்ணங்களுடன் (தானம்) வேலை செய்து, பின்னர் வெள்ளை நிறத்தின் (பல்லவி) அமைப்பைக் காட்ட வண்ணங்களைத் தீட்டுகிறார்.[5]
பறவைகள், விலங்குகள் மற்றும் மனிதர்கள் உள்ளிட்ட பல இயற்கை கூறுகளை உள்ளடக்கி இவர் ஓவியங்களை உருவாக்குகிறார். 1990 களில் இவரது ஒருசில படைப்புகள் சுற்றுச்சூழல் சீரழிவு பற்றிய கவலைகளை பிரதிபலிக்கின்றன.[5]
பிற கலைகள்
[தொகு]நாடகம், இசை, நடனம், இலக்கியம் மற்றும் கவிதைகளில் வாசுதேவுக்கு பரந்த ஆர்வம் உள்ளது. இவர் பல கலைத் துறைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். த. ரா. பேந்திரேவின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டார். கிரிஷ் கர்னாடின் ஹயவதனா என்ற நாடகத் தயாரிப்புக்காக முகமூடிகளை வடிவமைத்தார். பி. வி. கராந்த்த்திற்காக அரங்கங்களை அமைக்க உதவினார். உ. இரா. அனந்தமூர்த்தி எழுதிய சம்ஸ்காரா என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியான திரைப்படத் தழுவலில் கலை இயக்குனராக பணியாற்றினார். அ. கி. இராமானுசனின் புத்தகங்களுக்கு வரைபடங்கள் மற்றும் அட்டை வடிவமைப்புகளைச் செய்தார்.[5][11][14]
உலகின் பல பகுதிகளில் இவரது கலை நிகழ்ச்சிகளும், படைப்புகளும் பல்வேறு காட்சியகங்களில் சேகரிக்கப்பட்டுள்ளன. வாசுதேவ் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் “வர்ணசில்பி வெங்கடப்பா விருது ” உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். பெங்களூர் நகரில், வாசுதேவின் படைப்புகள் சுமுகா, கேலரி டி` ஆர்ட்ஸ்,[15][16][17][18] பெங்களூர் சர்வதேச மையம் போன்ற பல சிறந்த இந்திய காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[19]
இளம் கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கும் ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமான அர்னவாஸ் வாசுதேவ் அறக்கட்டளை மூலம் கலைப்பயிற்சிகளை வாசுதேவ் ஊக்குவிக்கிறார்.[20] அனன்யா திரிஷ்யா (சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள் மற்றும் வெளிநடவடிக்கை திட்டங்கள் மூலம் கலைஞர்களையும் அவர்களின் படைப்புகளையும் ஊக்குவித்தல்),[21] கலைஞர்கள் பொதுவெளியில் மக்களைச் சந்தித்து ஓவியங்களை வரைதல்:[22][23][24] பொது கலை (இரங்க சங்கரா நாடகத்தில் சுவரோவியங்கள்) போன்றவை.[6]>[25]
பெங்களூரில் உள்ள தேசிய நவீன கலைக்கூடம், வாசுதேவின் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான படைப்புகளை உள்ளடக்கிய ஒரு பின்னோக்கிய கண்காட்சியை 2018 செப்டம்பரில் நடத்தியது. இன்னர் ரெசோனன்ஸ்-ஏ ரிட்டர்ன் டு சாமா என்ற தலைப்பில், சதானந்த் மேனன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பல்வேறு ஊடகங்களில் 300 க்கும் மேற்பட்ட படைப்புகள் உட்பட தேசிய கலைக்கூடத்தின் ஐந்து தளங்களை இந்த நிகழ்ச்சி உள்ளடக்கியது. சமகால நவீனவாதியாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக அறியப்படும் வாசுதேவின் படைப்புகள், கலைக்கும் கைவினைப் பொருட்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை கலைகிறது. பின்னர் இந்தக் கலைப் பயணம் மும்பை, பெங்களூரு மற்றும் சென்னைக்கும் பயணித்தது.
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Artist: S.G. Vasudev". Gallery Sumukha. Retrieved 25 April 2025.
- 1 2 3 "S.G. Vasudev - Biography". Art & Beyond® | Contemporary Art Gallery (in ஆங்கிலம்). Retrieved 25 April 2025.
- 1 2 "S. G. Vasudev". DAG (in ஆங்கிலம்). Retrieved 25 April 2025.
- ↑ "Madras Art Movement’s SG Vasudev on his new-found love for abstract collage". https://www.thehindu.com/entertainment/art/madras-art-movements-sg-vasudev-on-his-new-found-love-for-abstract-collage/article66481177.ece.
- 1 2 3 4 5 6 7 8 "SG Vasudev: Crafting the Covenant". https://openthemagazine.com/art-culture/sg-vasudev-crafting-the-covenant/.
- 1 2 3 Mahadevan-Dasgupta, Uma (1 September 2018). "A retrospective traces the sustained resonance of S.G. Vasudev’s works" (in en-IN). The Hindu இம் மூலத்தில் இருந்து 2025-05-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250510163328/https://www.thehindu.com/entertainment/art/a-retrospective-traces-the-sustained-and-spiralling-resonance-of-sg-vasudevs-works/article24841932.ece.
- ↑ "S.G. Vasudev - Biography". Art & Beyond® | Contemporary Art Gallery (in ஆங்கிலம்). Retrieved 25 April 2025.
- 1 2 "S.G. Vasudev: Moving lines, lines of light, longing and belonging". https://www.asianart.com/articles/vasudev/index.html.
- ↑ Khare-Ghose, Archana (2024-05-31). "KCS Paniker: The artist who put South Indian strand of art on India's Modernism map". thefederal.com (in ஆங்கிலம்). Retrieved 2025-04-28.
- ↑ Mohta, Ekta (30 June 2019). "Canvasses of artist SG Vasudev on show at the NGMA Mumbai" (in en). Mid-day. https://www.mid-day.com/sunday-mid-day/article/canvasses-of-artist-sg-vasudev-on-show-at-the-ngma-mumbai-21257151.
- 1 2 3 "A retrospective traces the sustained resonance of S.G. Vasudev’s works". https://www.thehindu.com/entertainment/art/a-retrospective-traces-the-sustained-and-spiralling-resonance-of-sg-vasudevs-works/article24841932.ece.
- 1 2 Kumar, Sujatha Shankar (5 February 2019). "SG Vasudev looks back on a lifetime of Art" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/art/through-the-line-lightly-sg-vasudev-looks-back-on-a-lifetime-of-art-retrospective-inner-resonance/article26181966.ece.
- ↑ kite, melissa (2016-03-17). "Weaving together works of wonder". The Asian Age (in ஆங்கிலம்). Retrieved 2025-04-28.
- ↑ Sejekan, Harish Kumar (30 July 2016). "Ramanujan's verse, Vasudev's strokes converse" (in en). Deccan Chronicle. https://www.deccanchronicle.com/lifestyle/books-and-art/300716/ramanujans-verse-vasudevs-strokes-converse.html.
- ↑ Govindarajan, Nirmala (19 December 2015). "It’s black, it’s white…" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/features/metroplus/its-black-its-white/article8008357.ece.
- ↑ Sejekan, Harish Kumar (30 July 2016). "Ramanujan's verse, Vasudev's strokes converse" (in en). Deccan Chronicle. https://www.deccanchronicle.com/lifestyle/books-and-art/300716/ramanujans-verse-vasudevs-strokes-converse.html.
- ↑ Chandaraju, Aruna (22 February 2011). "State's best" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/features/friday-review/art/States-best/article15454805.ece.
- ↑ Madhukar, Jayanthi (Nov 30, 2014). "Rhyme on a canvas" (in en). Bangalore Mirror. https://bangaloremirror.indiatimes.com/opinion/sunday-read/rhyme-on-a-canvas/articleshow/45323284.cms.
- ↑ "Lines as Notes". Bangalore International Centre. 29 Mar 2025. https://bangaloreinternationalcentre.org/event/lines-as-notes/.
- ↑ "Meet the Artist | India International Centre". iicdelhi.in. Retrieved 2025-04-28.
- ↑ Malaviya, Nalini (10 Jun 2013). "Ananya Drishya presents Suresh Kumar G". Art Scene India. https://www.artsceneindia.com/2013/06/ananya-drishya-presents-suresh-kumar-g.html.
- ↑ Dhanaraj, Ruth (26 April 2024). "Bengaluru’s Art Park is celebrating its 75th session this weekend." (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/art/art-park-to-celebrate-its-75th-session-with-artists-and-their-audiences/article68103457.ece.
- ↑ Soji, Alwin Benjamin (29 August 2023). "Canvas Conversations: SG Vasudev opens up about Art Park's latest edition in Bengaluru" (in en). Indulgexpress. https://www.indulgexpress.com/culture/art/2023/Aug/29/canvas-conversations-52659.html.
- ↑ Mavad, Asra (5 July 2023). "Art initiative working to bridge artists, lay people". Deccan Herald (in ஆங்கிலம்). Retrieved 2025-04-28.
- ↑ "Our Story". Ranga Shankara. Retrieved 28 April 2025.