எஸ். சந்திர மௌலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். சந்திர மௌலி (பிறப்பு: 12 ஜூலை 1961) சென்னையில் வசிக்கும் ஒரு பத்திரிகையாளர், எழுத்தாளர். 1990களிலிருந்து தமிழ் பத்திரிகைகளில் குறிப்பாக கல்கி வார இதழில் எழுதிக்கொண்டிருக்கிறார். அரசியல், சினிமா, கலை, அறிவியல், இசை, விளையாட்டு, வரலாறு, சுற்றுச் சூழல் எனப்பல துறைகளில் கட்டுரைகளை எழுதி இருப்பதோடு, பல்வேறு பிரமுகர்களையும் பேட்டி கண்டு எழுதி உள்ளார்.

பத்திரிகையாளர் பணி[தொகு]

இவர் பேட்டி கண்ட முக்கிய பிரமுகர்கள் பட்டியலில் இந்தியப் பிரதமர்களான மன்மோகன் சிங், வி. பி. சிங், வாஜ்பாய், ஐ. கே. குஜரால், சந்திரசேகர், தேவ கௌடா மற்றும் நரேந்திர மோடி ஆகியோர் அடங்குவர்.

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் ஸ்ரீதர், நகைச்சுவை நடிகர் நாகேஷ், பழம் பெரும் ஓவியர் கோபுலு, மேஜிக் நிபுணர் கே. லால் ஆயியோரது வாழ்க்கை அனுபவங்களை பேட்டி கண்டு கல்கி பத்திரிகையில் தொடராக எழுதினார். அவை பின்னர் புத்தகங்களாக வெளிவந்தன.

எழுத்தாளர் பணி[தொகு]

ராஜிவ் காந்தி படுகொலையை புலனாய்வு செய்ய அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவரான டி. ஆர். கார்த்திகேயனின் புலனாய்வு குறித்த ஆங்கிலப் புத்தகத்தை, இவர் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்.

இவரது மற்ற புத்தகங்கள்: ஸ்விஸ் பேங்க், மன்மோகன் சிங் வாழ்க்கை, கட்சியின் கதை: பா.ஜ.க.

அமுதசுரபி தமிழ் மாத இதழில் பிலிம் நியூஸ் ஆனந்தனின் திரையுலக அனுபவங்களைத் தொடராக எழுதி இருக்கிறார்.

குஜராத்துக்கு நேரில் சென்று மாநிலத்தின் பல பகுதிகளிலும் பயணம் செய்து கல்கியில் "குஜராத் டுடே" என்ற தலைப்பில் நரேந்திர மோடி தலைமையில் மாநிலம் கண்ட வளர்ச்சியினைப் பதிவு செய்துள்ளார். அல்லயன்ஸ் பதிப்பகத்துக்காக பிரத்யேகமாக குஜராத் சென்று வந்து நரேந்திர மோடி: நேர்மையும், நிர்வாகத் திறமையும் என்ற புத்தகத்தை எழுதினார்.

தனிநபர் வாழ்வு[தொகு]

இவர் திருமணமானவர். இவருடைய மனைவியின் பெயர் பாரதி. இவர்களுக்கு ஒரு மகனும் (கௌதம் ராம்), ஒரு மகளும் (மானசா) உள்ளனர்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._சந்திர_மௌலி&oldid=3718129" இலிருந்து மீள்விக்கப்பட்டது