எஸ். சண்முகநாதன் (அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். சண்முகநாதன் (S. Shanmuganathan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் கீரமங்கலத்தினைச் சார்ந்தவர். சண்முகநாதன் இளங்கலை மற்றும் இளநிலைச் சட்டம் பட்டம் பெற்றுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1991ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]