எஸ். குலேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதி வணக்கத்துக்குரிய
எஸ். குலேந்திரன்
யாழ் ஆயர்
சபைதென்னிந்தியத் திருச்சபை
மறைமாவட்டம்யாழ்ப்பாணம்
ஆட்சி துவக்கம்1947
ஆட்சி முடிவு1970
பின்வந்தவர்டி. ஜெ. அம்பலவாணர்
பிற தகவல்கள்
பிறப்பு(1900-09-23)23 செப்டம்பர் 1900
இறப்பு14 பெப்ரவரி 1992(1992-02-14) (அகவை 91)
படித்த இடம்பரி. யோவான் கல்லூரி, யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணக் கல்லூரி
செரம்பூர் கல்லூரி

அதி வணக்கத்துக்குரிய சபாபதி குலேந்திரன் (Sabapathy Kulendran, 23 செப்டம்பர் 1900 – 14 பெப்ரவரி 1992) இலங்கைத் தமிழ்க் குருக்களும், தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் முதலாவது ஆயரும் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

குலேந்திரன் 1900 செப்டம்பர் 23 அன்று வழக்கறிஞர் சபாபதி என்பவருக்குப் பிறந்தார்.[1] குலேந்திரனின் சாம் சபாபதி யாழ்ப்பாண நகர முதல்வராக இருந்தவர்.[1] குலேந்திரன் யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார்.[1] பின்னர் இலண்டன் பல்கலைக்கழகத்தின் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[1] பின்னர் இந்தியாவில் மேற்கு வங்கத்தில் உள்ள செரம்பூர் கல்லூரியில் இறையியலில் பட்டம் பெற்றார். 1934-ஆம் ஆண்டில் மதப்போதகராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.[1]

குலேந்திரன் யாழ்ம்மாணம் இளைஞர் காங்கிரசின் உறுப்பினராக இருந்து சேவையாற்றினார்.[2][3]

குலேந்திரன் விசுவலிங்கம் என்பவரின் மகள் மதுரம் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.[1]

பணி[தொகு]

குலேந்திரன் தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் 1வது ஆயராக 1947 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][4] 1970 ஆம் ஆண்டில் இளைப்பாறினார்.[1]

மறைவு[தொகு]

இளைப்பாறிய பின்னர் வட்டுக்கோட்டையில் வாழ்ந்து வந்த குலேந்திரன் 1992 பெப்ரவரி 14 இல் இறந்தார்[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. பக். 88. http://www.noolaham.org/wiki/index.php?title=Dictionary_of_Biography_of_the_Tamils_of_Ceylon. 
  2. ராஜன் ஹூல் (1988). "Chapter 2: Some Milestones in the Development of Tamil Political Consciousness". Broken Palmyra. யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு. http://www.uthr.org/BP/volume1/Chapter2.htm. 
  3. Rajasingham, K. T.. "Chapter 7: State Councils - elections and boycotts". Sri Lanka: The Untold Story இம் மூலத்தில் இருந்து 2009-06-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090624090234/http://atimes.com/ind-pak/CI22Df02.html. பார்த்த நாள்: 2016-09-06. 
  4. "JDCSI: Reminiscent reflections of an 11-year old". யாழ்ப்பாண மறைமாவட்டம் (தென்னிந்தியத் திருச்சபை). Archived from the original on 2013-06-27. பார்க்கப்பட்ட நாள் 2016-09-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._குலேந்திரன்&oldid=3546330" இலிருந்து மீள்விக்கப்பட்டது