எஸ். ஓ. எஸ். பி. உடையப்பா அம்பலம்
பாகனேரி எஸ்.ஓ.எஸ்.பி. உடையப்பா அம்பலம் என்பவர் சுதந்திர போராட்ட வீரர் ஆவார். இவர் காங்கிரஸ் கட்சியினை சேர்ந்தவர் மாற்றும் பாகனேரி ஜில்லாபோர்டு தலைவராக இருந்தார்.
1934 ஆம் ஆண்டு இவரது உறவினர்களான பாகனேரி நடராஜ தேவர், ஆர். வி. சுவாமிநாதன் தேவர், எஸ். ஓ. எஸ். பி. பில்லப்பா அம்பலம் மற்றும் இவரது முயற்சியாலும், மகாத்மா காந்தியடிகள் இரண்டாவது முறையாக பாகனேரிக்கு வருகை தந்தார். இவர் காந்தியடிகளுக்கு வெள்ளிப் பேழையில் வைத்து கதர் துணி அச்சிடப்பெற்ற வரவேற்பும், தங்கத்தினால் ஆன கைராட்டையும் பரிசாக வழங்கினார். அதனை மகாத்மா காந்தியடிகள் ஏலத்திற்கு விட்டார். அதனை இவரே அதிக விலைக்கு பெற்றார். இன்றளவும் அவருடைய குடும்பத்தில் இவை பாதுகாப்பாக உள்ளன.[1]
சிவகங்கை மாவட்டத்தின், முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக இருந்தவர். ஜவகர்லால் நேரு, சத்தியமூர்த்தி, ராஜாஜி போன்றவர்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட இவருக்கு, ஆங்கில அரசாங்கம் ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கியது.[2]
இவருடைய மகன் ஓ. சுப்பிரமணியன், 1977, 1980, 1984 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில், சிவகங்கை தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "உடையப்பா 108-வது ஜயந்தி". தினமணி. 20-09-2012.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்".