எஸ். ஏ. வி. இளையராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எஸ்.ஏ.வி இளையராஜா என்பவர் தமிழக ஓவியர்களுள் ஒருவர். இவர் செஞ்சி அருகே உள்ள சிங்கவரம் எனும் கிராமத்தை சேர்ந்தவர்.[1] நீர்வண்ண ஓவியங்களை யதார்த்தம் போன்று வரைவதில் வல்லவர்.

குடும்பம்[தொகு]

இளையராஜாவின் அப்பா தமிழாசிரியர் எஸ்.ஏ.வடிவேலு. மூத்த அண்ணன் இளங்கோவன், இரண்டாவது அண்ணன் இளஞ்செழியன், தம்பி இளையபாரதி என இளையராஜாவுக்கு மூன்று சகோதரர்கள். [2] இவரின் அண்ணன் இளஞ்செழியன் என்பவர் சென்னை கவின்கலைக் கல்லூரியில் படித்தார். இளையராஜாவுக்கு ஓவியங்கள் குறித்து கற்பித்தார்.

இவர் மைசூரில் உள்ள டி. எம். எஸ் லலிதகலா மஹாசம்ஸ்தான கவின்கலைக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார்.[2]

கண்காட்சிகள்[தொகு]

எண்ணற்ற தனிநபர் ஓவியக் கண்காட்சிகளை நடத்தியுள்ளார். குழுவுடன் இணைந்து சென்னை லலித்கலா அகாடமி, மும்பை ஜஹாங்கீர் ஆர்ட் காலரி, சென்னை வின்யாஸா ப்ரீமியர் ஆர்ட் கேலரி, புதுவை கோலம்பாணி காலரி, தக்சின சித்ரா என பல காலரிகளில் ஓவியக் கண்காட்சி நடத்தியுள்ளார். இவர் உயர் யதார்த்த ஓவியங்கள் வரைவதில் வல்லவர்.

கல்கி, ஆனந்தவிகடன் போன்ற இதழ்களில் கவிதைகளுக்கு இவரது ஓவியங்கள் வெளிவந்துள்ளன.[2]

விருதுகள்[தொகு]

  • காந்தி மெமோரியல் விருது
  • கோணசீமா சித்ரகலா விருது

போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.[2]

ஆதாரங்கள்[தொகு]

  1. [கட்டுரை:உயிரோவியம்- தூரிகை - ஆசிரியர் க. பாலாஜி
    அவள் விகடன் 21.03.2017]
  2. 2.0 2.1 2.2 2.3 [ஓவியர் எஸ்.ஏ.வி இளையராஜா - அரவிந்த் சுவாமிநாதன் தென்றல் இணைய இதழ் டிசம்பர் 2018]

வெளி இணைப்புகள்[தொகு]

எஸ்.ஏ.வி. இளையராவின் முகநூல் பக்கம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஏ._வி._இளையராஜா&oldid=2641111" இருந்து மீள்விக்கப்பட்டது