எஸ். ஏ. சத்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எஸ். ஏ. சத்யா என்பவர் ஒரு தமிழகத்தின் திமுகவைச் சேர்ந்த அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினருமாவார்.

வாழ்க்கை[தொகு]

கேரளத்தை பூர்வீகமாக கொண்ட இவர் கிருட்டிணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பிறந்தவர். ஓசூர் ஆர். வி. அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புவரை படித்துள்ளார். அதிமுகவில் இணைந்த இவர் 2001 முதல் 2006 வரை ஒசூர் நகராட்சியில் வார்டு உறுப்பினராக இருந்தார்.[1] பின்னர் 2006 ஆண்டு ஒசூர் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட பிணக்கால் அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தார். 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியுற்றார். இந்திலையில் 2019 ஆண்டு நடந்த ஒசூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] தற்போது இவர் ஒசூர் நகர திமுக பொறுப்பாளராக உள்ளார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, ஓசூர் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு". இந்து தமிழ். மார்ச் 18 2019. 
  2. "ஓசூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.ஏ.சத்யா வெற்றி". செய்தி. தினகரன் (2019 மே 23). பார்த்த நாள் 2 சூன் 2019.
  3. "ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: தி.மு.க. வேட்பாளர் சத்யா வெற்றி". செய்தி. தினத்திந்தி (2019 மே 24). பார்த்த நாள் 2 சூன் 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஏ._சத்யா&oldid=2752053" இருந்து மீள்விக்கப்பட்டது