எஸ். எல். பைரப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எஸ். எல். பைரப்பா
S.L.Bhyrappa.jpg
பிறப்பு20 ஆகத்து 1931 (அகவை 89)
ஹாசன் மாவட்டம்
பாணிபுனைகதை
விருதுகள்சாகித்திய அகாதமி விருது

சாந்தேசிவரா லிங்கண்ணையா பைரப்பா (ஆங்கிலம்: Santeshivara Lingannaiah Bhyrappa ) (பிறப்பு 26 ஜூலை 1934) இவர் ஒரு கன்னட நாவலாசிரியர் ஆவார். இவரது படைப்புகள் இந்தியாவிலுள்ள கர்நாடக மாநிலத்தில் பிரபலமாக உள்ளன. நவீன இந்தியாவின் பிரபல புதின ஆசிரியர்களில் ஒருவராக பைரப்பா பரவலாகக் கருதப்படுகிறார். [1] அவரது புதினங்கள் கரு, கட்டமைப்பு மற்றும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் தனித்துவமானது. [2] இவரது புத்தகங்கள் கன்னட மொழியில் அதிகம் விற்பனையாகிறது. அவர் எழுதிய புத்தகங்கள் இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மேலும் அதிகமாக விற்பனையும் ஆகிறது. [3] இவருக்கு 2010 இல் 20 வது சரஸ்வதி சம்மன் விருது வழங்கப்பட்டுள்ளது. [4]

பைரப்பாவின் படைப்புகள் ஓரளவுக்கு அவர் எழுதும் தலைப்புகளின் வரம்பு காரணமாக தற்கால கன்னட இலக்கியங்களான நவோதயா,நவ்யா, பண்டாயா, அல்லது தலிதா போன்ற எந்தவொரு குறிப்பிட்ட வகையிலும் பொருந்தாது. அவரது முக்கிய படைப்புகள் பல பொது விவாதங்கள் மற்றும் சர்ச்சைகளின் மையத்தில் உள்ளன. மார்ச் 2015 இல், பைரப்பாவுக்கு சாகித்ய அகாதமி பெல்லோஷிப் வழங்கப்பட்டது. [5] இந்திய அரசு அவருக்கு 2016 ல் பத்மஸ்ரீ விருது வழங்கியது. [6]

சுயசரிதை[தொகு]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

பெங்களூருலிருந்து 162 கி.மீ தூரத்தில் உள்ள ஹாசன் மாவட்டத்தின் சென்னராயப்பட்டணா தாலுகாவில் உள்ள சாந்தேசிவாரா என்ற கிராமத்தில் எஸ் எல் பைரப்பா பிறந்தார். அவர் தனது குழந்தை பருவத்திலேயே அரையாப்பு பிளேக்கால் தனது தாயையும் சகோதரர்களையும் இழந்தார். மேலும் படித்துகொண்டே சிறு சிறு வேலைகளையும் மேற்கொண்டார். அவரது குழந்தை பருவத்தில், கோரூர் ராமசாமி ஐயங்காரின் எழுத்துக்களால் அவர் ஈர்க்கப்பட்டார்.

பைரப்பா மைசூருக்குச் செல்வதற்கு முன்பு சென்னராயப்பட்டணா தாலுகாவில் தனது ஆரம்பக் கல்வியையும், உயர் கல்வியையும் முடித்தார். தனது சுயசரிதையான பிட்டியில் (சுவர்) அவர் தனது உயர்நிலைப் பள்ளி கல்வியில் ஒரு இடைவெளி இருந்ததைப் பதிவு செய்கிறார். அவரது உறவினரின் ஆலோசனையைப் பின்பற்றி பைரப்பா திடீரென பள்ளியை விட்டு வெளியேறி, அவருடன் ஒரு வருடம் அலைந்தார். அவருடன் வந்த உறவினர் பைரப்பாவைமும்பைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் ரயில்வே சுமை கூலியாக பணிபுரிந்தார். மும்பையில் அவர் சாதுக்கள் குழுவைச் சந்தித்து அவர்களுடன் சேர்ந்து ஆன்மீக நிம்மதியைத் தேடினார். தனது கல்வியை மீண்டும் தொடங்க மைசூர் திரும்புவதற்கு முன்பு சில மாதங்கள் அவர்களுடன் அலைந்தார்.

கல்வி[தொகு]

தொழில்[தொகு]

எஸ்.எல்.பைரப்பா, ஹூப்ளியின் ஸ்ரீ கடசித்தேஷ்வர் கல்லூரியில் தத்துவ விரிவுரையாளராக இருந்தார். மேலும் குஜராத்தில் சர்தார் படேல் பல்கலைக்கழகம் ; என்.சி.இ.ஆர்.டி, டெல்லி ; மற்றும் மைசூர் பிராந்திய கல்வியியல் கல்லூரி, ஆகியவற்றில் பணிபுரிந்து பின்னர் 1991 ல் ஓய்வு பெற்றார். பைரப்பாவுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது அவரது மனைவியுடன் மைசூரில் வசித்து வருகின்றனர்.

பைரப்பா ஆங்கிலம், கன்னடம் மற்றும் சமசுகிருதம்,இந்திய மற்றும் மேற்கத்திய தத்துவங்களில் மொழிகளில் பரவலாகப் படிக்கப்படுகிறார். [7]

புகழ்[தொகு]

பைரப்பாவின் பல நாவல்கள் பிற இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. [8] பைரப்பா கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக கன்னடத்தில் அதிகம் விற்பனையாகும் எழுத்தாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார், மேலும் அவரது புத்தகங்களின் மொழிபெயர்ப்புகள் கடந்த எட்டு ஆண்டுகளாக மராத்தியிலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தியில் சிறந்த விற்பனையிலும் உள்ளன. [9]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

 1. "S L Bhyrappa". The India Club.
 2. "Novelist S.L. Bhyrappa". Kamat's Potpourri.
 3. "Personalities of Mysore". Mysore city corporation. மூல முகவரியிலிருந்து 26 August 2007 அன்று பரணிடப்பட்டது.
 4. https://m.jagranjosh.com/current-affairs/eminent-kannada-author-s-l-bhyrappa-awarded-20th-saraswati-samman-for-his-novel-mandra-1321531975-1
 5. "Sahitya Akademi elects S L Bhyrappa, C Narayana Reddy as fellows". NetIndian.
 6. "Padma Awards 2016". Press Information Bureau, Government of India (2016).
 7. 7.0 7.1 https://www.thenigerianvoice.com/amp/news/211251/noted-kannada-novelist-prof-bhyrappa-to-interact-with-guwaha.html
 8. "S L Bhyrappa". Online Webpage of India book club. The India Club. பார்த்த நாள் 23 June 2007.
 9. "Personalities of Mysore". Online Webpage of Dasara Committee. Mysore city corporation. மூல முகவரியிலிருந்து 26 August 2007 அன்று பரணிடப்பட்டது.

வெளிப்புற இணைப்புகள் மற்றும் மேலதிக வாசிப்பு[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
S. L. Bhyrappa
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
 • Interview with S L Bhyrappa – Times of India [1]
 • Pampa Award to Bhyrappa in 2001
 • Belagere Krishnashastri, Mareyaladeete, for a warm-hearted interpretation of the author's experiences with Bhyrappa.
 • Bhyrappabhinandana, a felicitation book on S.L. Bhyrappa
 • S.L. Bhyrappa Avara Krutigala Vimarshe a collection of literary criticism on S.L.Bhyrappa's works compiled by Sumateendra Nadig
 • Mandra-Manthana, a collection of essays about S.L. Bhyrappa's novel, Mandra, by various literary critics
 • Gruhabhanga pdf book at internet archive
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._எல்._பைரப்பா&oldid=2961612" இருந்து மீள்விக்கப்பட்டது