எஸ். எம். பாலாஜி
Appearance
எஸ். எம். பாலாஜி (பிறப்பு: ஏப்ரல் 4, 1962) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கன்னியாகுமரி மாவட்டம், தோப்பூரில் பிறந்த இவர் பல், முகச்சீரமைப்பு மருத்துவக் கலையில் சிறந்து விளங்குபவர். இவர் பல மருத்துவ நூல்களை எழுதியிருக்கிறார். டாக்டர் எம்.ஜி.ஆர் வாழ்நாள் சாதனை விருதினையும் பெற்றுள்ளார்.
தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் பரிசு
[தொகு]இவர் எழுதிய நூல்களில் இரண்டு நூல்கள் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றிருக்கிறது.
- "பலவித தலைவலிகளும் தீர்வுகளும்" எனும் நூல் 2000 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மருந்தியல், உடலியல், நலவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
- "வெளிநாடுகளில் விந்தையான அனுபவங்கள்" எனும் நூல் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பயண இலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.