எஸ். எம். பழனியப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ச. மு. பழனியப்பன்
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்
தொகுதி கோபிசெட்டிபாளையம்
தனிநபர் தகவல்
பிறப்பு 1930
சவண்டப்பூர், கோபிசெட்டிபாளையம், தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சி திராவிட முன்னேற்ற கழகம்
பிள்ளைகள் 3
இருப்பிடம் கோபிசெட்டிபாளையம், தமிழ்நாடு, இந்தியா
சமயம் Hindu

சவண்டப்பூர் முத்து கவுண்டர் பழனியப்பன் (பிறப்பு 1930) என்ற ச. மு. பழனியப்பன், தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார். 1971 ல் கோபிசெட்டிபாளையம் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு வெவ்வேறு முதலமைச்சர்கள் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் கீழ் பணியாற்றினார்.[1]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

பழனியப்பன் 1930 ம் ஆண்டு கோபிசெட்டிபாளையத்தில் சவண்டப்பூர் கிராமத்தில் முத்து கவுண்டரின் மூத்த மகனாகப் பிறந்தார். ஒரு பெரிய புகழ்மிக்க விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் சிறிய வயதில் தனது தாயை இழந்தார். அவர் ஒரு மருத்துவராக மாற கடினமாக உழைத்தார். அவரது இளைய சகோதரர், எஸ். எம். கன்டப்பன், ஒரு வழக்கறிஞர் ஆவார். இவருக்கு மூன்று சகோதரிகளும் இருந்தனா். தனது தொழில் மூலம் சமூகத்திற்கு பெரும் சேவையை செய்தாா். அவர் 80 வயதான போதும் கூட தனது மருத்துவத் தொழில் மூலமாக குறைவான அல்லது கட்டணமற்ற சேவையின் மூலமாக மக்களுக்கு சேவை செய்கிறார்.

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._எம்._பழனியப்பன்&oldid=2780322" இருந்து மீள்விக்கப்பட்டது