எஸ். எம். இக்ரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஷேக் முஹம்மது இக்ரம் (Sheikh Muhammad Ikram உருது : شیخ محمد اکرام; ஆ 10 செப்டம்பர். [lower-alpha 1] 1908 - 17 ஜனவரி 1973) எஸ்.எம் இக்ரம் என பரவலாக அறியப்படும் இவர் பாகிஸ்தான் வரலாற்றாசிரியர், சுயசரிதை எழுத்தாளர் மற்றும் இலக்கியாதி ஆவார். இவர் இந்தியக் குடிமைப் பணியில்1931 ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தார். 1947 ஆம் ஆண்டில் இந்தியப் பிரிவினையின் போது இவர் பாக்கித்தான் குடிமைப் பணியில் சேர்ந்தார்.சூலை 1, 1966 அன்று, லாகூரின் இஸ்லாமிய கலாச்சார நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார், 1973 இல் இவர் தனது அறுபத்து நான்கு வயதில் இயற்கை எய்தினார். அதுவரையில் இவர் அந்தப் பதவியில் இருந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

எஸ்.எம். இக்ராமின் பெற்றோர் இன்றைய பாகிஸ்தானில் பஞ்சாபில் உள்ள குஜ்ரான்வாலா மாவட்டத்தினை பூர்விகமாகக் கொண்டவர்கள். இவர்கள் வஜிராபாத் துணைப்பிரிவில் உள்ள ரசூல்நகர் என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவரது தந்தை, ஷேக் ஃபசல் கரீம், முகலாயத்திற்கு முந்தைய வருவாய் மற்றும் நீதி நிர்வாகத்தின் பரம்பரை அலுவலகத்தில் பணிபுரிந்தவர் ஆவார். அவரது தாயார் சர்தார் பேகம். இவருக்கு ஐந்து சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள் உள்ளனர். இதில் இவர் தான் மூத்தவர் ஆவார்.

பஞ்சாப் வேளாண்மைத் துறையின் துணை இயக்குநராக பணிபுரிந்த காலத்தில் மியான் முக்தார் நாபியின் ("மியான்ஜி") இரண்டு மகள்களின் (ஜீபுன்னிசா மற்றும் ஜீனத்) மூத்தவருடன் குஜராத்தில் டிசம்பர் 30, 1936 அன்று இக்ரம் திருமணம் செய்து கொண்டார். இக்ராமின் மனைவி டெல்லி மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றார், மேலும் லாகூரின் கின்னெய்ட் மகளிர் கல்லூரியில் பாரசீகம், ஆங்கிலம் மற்றும் வரலாற்றில் பி.ஏ. பட்டம் பெற்றார். ஜனவரி 17, 1973 இல் லாகூரில் இவர் இறந்தார். அப்போது இவருக்கு நான்கு குழந்தைகள் இருந்தனர். [lower-alpha 2]

கல்வி[தொகு]

இக்ரம் தனது ஆரம்பக் கல்வியை பைசலாபாத் மற்றும் டோபா தேக் சிங் ஆகிய பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ள அக்சா கோஜ்ராவில் பயின்றார். இடைநிலைக் கல்வியினை வஜிராபாத்தின் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.1924 இல், அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். அந்தப் பள்ளி பின்னர் லியால்பூர் அரசு இடைநிலைக் கல்லூரியாக மாறியது. 1926 ஆம் ஆண்டில் கலை பீட (எஃப்.ஏ) தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றார். லியால்பூரில் இருந்த நான்கு ஆண்டுகளில் (1922-1926) இக்ரம் பாரசீக மொழி மற்றும் கவிதைகளிலும் தனது ஆர்வத்தினையும் திறமையையும் வளர்த்துக் கொண்டார். லாகூர் கல்லூரியில் இவர் பரசீகத்தில் பி. ஏ. பட்டமும் 1928 ஆம் ஆண்டில் பொருளியல் பட்டமும் 1930 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

தொழில் வாழ்க்கை[தொகு]

ஒரு முழுநேர அரசு ஊழியர் என்றாலும், எஸ்.எம். இக்ரம் தனது எழுத்துக்கள் மூலமாகப் பரவலாக அறியப்பட்டார்.

எஸ்.எம். இக்ரம் மற்றும் அல்லாமா இக்பால், லண்டன், 29 டிசம்பர் 1932. [lower-alpha 3]

1930 ஆம் ஆண்டில் ஆங்கில முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, ஜனவரி 1931 ஆம் ஆண்டில் டெல்லியில் இந்தியக் குடிமைப் பணித் தேர்வினை எழுதினார். தேர்வில் வெற்றி பெற்றதால் இவர் செப்டம்பர் மாதம் ஆக்ஸ்போர்டில் உள்ள இயேசு கல்லூரிக்கு இரண்டு ஆண்டுகள் பயிற்சிக்கு அனுப்பப்பட்டார் (1931-1933). அக்டோபரில் இங்கிலாந்தில் இருந்து திரும்பியபோது, பம்பாய் பிரசிடென்சியில் நவம்பர் 1933 முதல் செப்டம்பர் 1947 வரையிலான காலகட்டங்களில் இக்ரம் பல்வேறு பதவிகளுக்கு நியமிக்கப்பட்டார். 1947 ஆம் ஆண்டில் இந்தியப் பிரிவினையின் போது இவர் பாக்கித்தான் குடிமைப் பணியில் சேர்ந்தார். இவர் நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1953-1954 இல் வருகை பேராசிரியராக, 1958-59 மற்றும் 1961-62 ஆகிய ஆண்டுகளில் கற்பித்தல் பணிகளை மேற்கொண்டார்.

குறிப்புகள்[தொகு]


பிழை காட்டு: <ref> tags exist for a group named "lower-alpha", but no corresponding <references group="lower-alpha"/> tag was found, or a closing </ref> is missing

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._எம்._இக்ரம்&oldid=2868152" இருந்து மீள்விக்கப்பட்டது