எஸ். ஈஸ்வரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எஸ். ஈஸ்வரன்
தாய்மொழியில் பெயர்எஸ். ஈஸ்வரன்
பிறப்பு14 சூன் 1962 (1962-06-14) (அகவை 57)
சிங்கப்பூர்
படித்த கல்வி நிறுவனங்கள்அடிலெய்டு பல்கலைக்கழகம்,
ஹார்வர்ட் பல்கலைக் கழகம்
முன்னிருந்தவர்யாகூப் இப்ராஹிம்
அரசியல் கட்சிமக்கள் செயல் கட்சி

எஸ் ஈஸ்வரன் (S. Iswaran) இவர் 1962 ஜூன் 14 அன்று பிறந்த ஒரு சிங்கப்பூர் அரசியல்வாதியும் முன்னாள் தொழில் நிர்வாகியும் ஆவார். ஆளும் மக்கள் செயல் கட்சியின் (PAP) உறுப்பினர், மேலும், அவர் வர்த்தக மற்றும் தொழில் துறை (தொழில்) அமைச்சராக இருந்தார். அவர் இப்போது தகவல் தொடர்பு அமைச்சர் மற்றும் சைபர் பாதுகாப்புத்துறைக்கும் பொறுப்பான அமைச்சர் ஆவார். இவர் முன்னதாக பிரதம மந்திரி அலுவலகத்தில் அமைச்சராகவும், உள்துறை விவகாரங்கள் மற்றும் வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். அவர் 1997 முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

தொழில்[தொகு]

பொது மற்றும் தனியார் துறைகளில் ஈஸ்வரன் பணிபுரிந்தார். சிங்கப்பூர் இந்திய அபிவிருத்தி சங்கத்தின் (SINDA) தலைமை நிர்வாக அதிகாரியாகவும், வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் இயக்குனருமாகவும், டெமாசெக் ஹோல்டிங்ஸின் மூத்த துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பணியாற்றினார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

1997 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாராளுமன்றத்திற்கு முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டார். செப்டம்பர் 2004 முதல் ஜூன் 2006 வரை, அவர் பாராளுமன்ற துணை சபாநாயகராக பணியாற்றினார்.

2006 ஆம் ஆண்டு ஜூலை 1இல், ஈஸ்வரன் வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகத்தின் ஒரு மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 1இல், அவர் வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சராக பதவி உயர்வு பெற்றார். 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி அவர் கல்வி அமைச்சகத்தில் மூத்த அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

ஈஸ்வரன் 2011 பொதுத் தேர்தலுக்குப் பிறகு, பிரதமரின் அலுவலகத்தில் அமைச்சராகவும், உள்துறை அமைச்சகத்தின் இரண்டாவது அமைச்சராகவும், வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

பெருநிறுவன வாழ்க்கை[1]

இவரது தொழில் வாழ்க்கையில் பல நிறுவனங்களில் இயக்குநராக இருந்துள்ளார். 1996 முதல் 1998 வரை சிங்கப்பூர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் மூலோபாய அபிவிருத்தி இயக்குநராகவும், 2003 முதல் 2006 வரை டெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் இருந்தார் [2] இவர் நவம்பர் 2003 முதல் குயின்டில்ஸ் டிரான்ஸ்நேஷனலின் இயக்குநராக பணிபுரிந்தார், சன்னிங்கேல் டெக் என்பதில் 2005 ஜூலை முதல் 2006 ஜூன் வரை,[3] ஷின் கார்ப்பரேசனில் 2006 வரை,[4] ஷிசெம்ப்கார்ப் இண்டஸ்ட்ரீஸில் 2003 ஜனவரி முதல் 2004 ஏப்ரல் வரை[5] மற்றும் பல தொழில்களில் இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.[6] ஜூன் 2003 முதல் ஜூன் 2006 வரை ஹைப்ளக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் இருந்தார்.[7] 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதியில் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் யாகூப் இப்ராஹிம் ஓய்வு பெற்ற பின்னர் அத்திறக்கு அமைச்சராக உள்ளார்.

கல்வி[தொகு]

ஈஸ்வரன் செயின்ட் ஆண்ட்ரூ பள்ளியின் முன்னாள் மாணவர் ஆவார். அவர் அடிலெய்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்து, அங்கு அவர் முதல் வகுப்பு மரியாதை பட்டம் பெற்றார். ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் ஒரு பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ஈஸ்வரன் கே. மேரி டெய்லர் என்பவரை மணந்தார். இத்தம்பதியருக்கு, மோனிஷா ஒரு மகளும், சஞ்சையா, கிருஷண் இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஈஸ்வரன்&oldid=2802957" இருந்து மீள்விக்கப்பட்டது