எஸ். இராமச்சந்திரன் (ஓவியர்)
எஸ். இராமச்சந்திரன் (அக்டோபர் 12, 1942 - அக்டோபர் 3, 2009) இலங்கையின் மலையகத்தைச் சேர்ந்த ஓவியர், சிற்பி, எழுத்தாளர், ஊடகவியலாளர் ஆவார். சந்ரா என்ற பெயரில் ஓவியங்கள் வரைந்தவர்.
வாழ்க்கைச் சுருக்கம்
[தொகு]இராமச்சந்திரன் நுவரெலியா லபுக்கலைத் தோட்டத்தில் பிறந்தவர். ஆரம்பத்தில் சிறுகதைகள், மற்றும் கட்டுரைகள் எழுதி வந்த இவர் 1960களில் வீரகேசரியில் இணைந்து சந்ரா என்ற பெயரில் ஓவியரானார். பல புதின நூல்களுக்கு அட்டைப்படங்கள் உட்பட ஓவியங்கள் வரைந்துள்ளார். பாரதி, சித்ரா, பிரியா போன்ற சித்திரக் கதை இதழ்கள் இவரது இவரது ஓவியங்களைத் தாங்கி வெளிவந்தன.
நாட்டின் நிலவியப் போர்ச்சூழல் காரணமாக மீண்டும் தனது தோட்டத்திற்குச் சென்று வாழலானார். அங்குள்ள பெருந்தோட்டங்களில் உள்ள கோவில்களில் சிற்பங்களைச் செதுக்கினார்.
பின்னர் தினக்குரல் பத்திரிகையில் இணைந்து சாணக்கியன் என்ற பெயரில் கேலிச் சித்திரங்கள் வரைந்தார். தினக்குரலின் சிறுவர் பகுதி, மற்றும் மலையகப் பார்வை ஆகிய இணைப்புகளுக்குப் பொறுப்பாக இருந்தார். அக்காலகட்டத்தில் இவர் தொடர்கதையாக எழுதிய "கடவுளின் குழந்தைகள்" என்ற புதினம் இவரது மறைவிற்குப் பின்னர் நூலாக வெளிவந்தது.
விருதுகள்
[தொகு]2003 ஆம் ஆண்டில் சிறந்த கருத்துப்பட ஓவியருக்கான விருது இவருக்கு வழங்கப்பட்டது.
உசாத்துணை
[தொகு]- துயர் பகிர்தல்: ஓவியர் எஸ். இராமச்சந்திரன், வீரகேசரி, பெப்ரவரி 3, 2013