எஸ். இராமச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். இராமச்சந்திரன்
பிறப்புசயம்பர் ராமச்சந்திரன்
(1949-12-04)4 திசம்பர் 1949
நவாலி, யாழ்ப்பாணம்
இறப்புபெப்ரவரி 16, 2020(2020-02-16) (அகவை 70)
கொழும்பு, இலங்கை
இருப்பிடம்தெகிவளை, இலங்கை
தேசியம்இலங்கைத் தமிழர்
பணியகம்இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
அறியப்படுவதுபொப்பிசைப் பாடகர்
வாழ்க்கைத்
துணை
பத்மாசனி
பிள்ளைகள்இருவர்

எஸ். இராமச்சந்திரன் (திசம்பர் 4, 1949 - பெப்ரவரி 16, 2020) இலங்கையின் மெல்லிசை, மற்றும் பொப் இசைப் பாடகர் ஆவார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

யாழ்ப்பாண மாவட்டம், நவாலி என்ற ஊரில் பிறந்த இராமச்சந்திரன் வளர்ந்தது அரியாலையில்.[1] அரியாலை சிறீபார்வதி வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வி கற்று பின்னர் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்கல்வி கற்றார். பாடசாலை நாட்களிலேயே யாழ்ப்பாணம் கண்ணன் கோஷ்டி இசைக் குழுவில் இணைந்து கோயில் திருவிழாக்களில் பாடியிருக்கிறார். பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் இலங்கை வானொலியில் ஒலிப்பதிவாளராக 1970இல் பணியில் சேர்ந்தார். வானொலி இசைப் பகுதி நிகழ்ச்சித் தயாரிப்பு உதவியாளராகப் பணியாற்றினார். இவரது மனைவி பத்மாசனி. இவர்களுக்கு கானரூபன், மூகாம்பிகை என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.[1]

மெல்லிசைப் பாடகராக[தொகு]

1970களின் ஆரம்பம் இலங்கையில் ஈழத்து இதழ்கள், ஈழத்துத் திரைப்படங்கள், மெல்லிசைப்பாடல்கள், பொப் இசைப் பாடல்கள் எனக் கொடி கட்டிப்பறந்த காலம். இராமச்சந்திரனுக்கும் வானொலியில் பாடும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. இவர் "வான நிலவில் அவளைக் கண்டேன் நான் ....!", "ஆடாதே ஆடாதே சூதாட்டம் ஆடாதே...." போன்ற பல புகழ் பெற்ற பாடல்களைப் பாடினார். கொழும்பு தமிழ் கலைஞர் சங்க மூலமாக பல கலை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.[1]

மறைவு[தொகு]

நீண்ட காலம் சுகவீனமுற்றிருந்த எஸ். ராமச்சந்திரன் 2020 பெப்ரவரி 16 அன்று தனது 70-வது அகவையில் கொழும்பில் காலமானார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "பொப்இசை பாடகர் எஸ். இராமசந்திரன்". தினகரன் வாரமஞ்சரி. 15 சூலை 2012. Archived from the original on 3 சூலை 2013. பார்க்கப்பட்ட நாள் 15 சூலை 2012.
  2. இலங்கையின் பிரபல பாடகர் எஸ்.ராமச்சந்திரன் காலமானார்!, எஸ்பிஎஸ், 17 பெப்ரவரி 2020
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._இராமச்சந்திரன்&oldid=3586372" இலிருந்து மீள்விக்கப்பட்டது