எஸ். இரத்தினவேல் பாண்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எசு. இரத்தினவேல் பாண்டியன்
பிறப்புபெப்ரவரி 13, 1929(1929-02-13)
திருப்புடைமருதூர், திருநெல்வேலி, பிரித்தானிய இந்தியா
இறப்பு28 பெப்ரவரி 2018(2018-02-28) (அகவை 89)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு
தேசியம்இந்தியன்

எஸ். இரத்தினவேல் பாண்டியன் ( பிறப்பு 13 பிப்பிரவரி 1929–28,பிப்ரவரி 2018) என்பவர் இந்திய உச்சநீதி மன்ற நீதிபதியாக இருந்து ஒய்வு பெற்றவர்.

இளமையும் கல்வியும்[தொகு]

தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூர் என்னும் சிற்றுரில் பிறந்த இரத்தினவேல் பாண்டியன் தம் பள்ளிப் படிப்பை அம்பாசமுத்திரத்திலும் கல்லூரிக் கல்வியைத் திருநெல்வேலி தூய சேவியர் கல்லூரியிலும் முடித்தார். 1954 ஆம் ஆண்டில் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.

அரசியலில்[தொகு]

இவர் 1960களில் திருநெல்வேலி மாவட்ட திமுக மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்தார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கருணாநிதி கைதுசெய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் இருந்தபோது ரத்தினவேல் பாண்டியன் தினமும் அவரைச் சந்தித்துப் பேசுவார். அவரிடம் இளம் வழக்கறிஞர்களாகப் பணியாற்றியவர்களில் மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவும் ஒருவர். திமுக சார்பில் 1971 இல் நடந்த சட்ட மன்றத் தேர்தலில் சேரன்மகாதேவி தொகுதியில் போட்டியிட்ட ரத்தினவேல் பாண்டியன், 193 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தார். இதன்பிறகு அரசியிலில் இருந்து விலகி வழிக்கறிஞர் பணியில் தீவிரம் காட்ட ஆரம்பித்தார்.

வழக்குரைஞராக[தொகு]

பதினேழு ஆண்டுகள் வழக்குரைஞர் பணியாற்றிய பிறகு சென்னை உயர்நீதி மன்ற அரசுத் தரப்பு வழக்குரைஞராக 1971 ஆம் ஆண்டில் அமர்த்தப்பட்டார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக[தொகு]

சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியாக 1974 இல் பதவியேற்றார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பதவி வகித்தபோது, ஆராய்ச்சி மணி அடித்து நீதிகேட்ட பசுவுக்காகத் தன் மகனைப் பலி கொடுத்த சோழ மன்னன் தொடர்பான காட்சியை உயர் நீதிமன்றத்தில் நிறுவச்செய்தார். சமநீதிச் சோழன் என அதில் பெயர் பொறித்தது அவரது தமிழ்ப் பற்றுக்கு ஒரு சாட்சி.[1]

உச்ச நீதிமன்ற நீதிபதியாக[தொகு]

1988 திசம்பர் 14 ஆம் பக்கலில் இந்திய உச்சநீதி மன்றத் நீதிபதியாகப் பதவி ஏற்றார். 1994 மார்ச்சு 12 ஆம் நாளில் ஒய்வு பெற்றார். இரத்தினவேல் பாண்டியன் மாணவப் பருவம் தொட்டு முற்போக்கு, சமூகச் சிந்தனை கொண்டவராக இருந்தார். மறைந்த நீதிபதி வீ ஆர் கிருஷ்ண அய்யரைத் தம் முன்னோடியாகக் கொண்டு நீதித் துறையில் செயல்பட்டார்.

விருது[தொகு]

இவருடைய சட்டப்பணியைப் பாராட்டி சோகோ என்னும் குடிமக்கள் சமூக அமைப்பு வீ. ஆர். கிருஷ்ண ஐயர் விருதை வழங்கிப் பெருமைப் படுத்தியது.

சான்றுகள்[தொகு]

http://supremecourtofindia.nic.in/judges/bio/63_srpandian.htm

மேற்கோள்[தொகு]

  1. என்.சுவாமிநாதன் (2018 மார்ச் 2). "ரத்தினவேல் பாண்டியன்: ஓயாத சமூக நீதிப் பயணி". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 3 மார்ச் 2018.

http://livechennai.com/detailnews.asp?catid=&newsid=23583 http://timesofindia.indiatimes.com/city/chennai/Ex-judge-says-honoured-to-get-award-named-after-his-icon/articleshow/50422406.cms

வெளி இணைப்புகள்[தொகு]