எஸ்.வி. சந்திரசேகர் ஐயா
| எஸ். வி. சந்திரசேகர் ஐயா | |
|---|---|
கேம்பிரிட்ஜில் பேராசிரியர் எஸ். வி. சி. ஐயா | |
| பிறப்பு | 6 மார்ச்சு 1911 மைசூர், மைசூர் மாநிலம், பிரிட்டிஷ் இந்தியா |
| இறப்பு | 15 சூன் 1992 (அகவை 81) நியூ ஜெர்சி, அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
| துறை | வானிலை ஆய்வு மின் மற்றும் தொலைத்தொடர்புப் பொறியியல் |
| கல்வி கற்ற இடங்கள் | கையஸ் கல்லூரி (Caius College), கேம்பிரிட்ஜ் |
| அறியப்படுவது | வளிமண்டல இரைச்சல் (Atmospheric Noise) குறித்த ஆய்வு பொறியியல் கல்வி |
| துணைவர் | மீனாட்சி பெலவாடி |
| பிள்ளைகள் | ஜெகதீஷ் சி. ஐயா லீலா எஸ். ராவ் |
எஸ்.வி. சந்திரசேகர் ஐயா(S.V. Chandrashekhar Aiya) (1911–1992) ஒர் இந்திய விஞ்ஞானி ,பொறியாளர் ஆவார். இவர் தொலைக்காட்சி , வானொலி ஒலிபரப்பு சமிக்ஞைகளின் (அர்ஃப் சமிக்ஞைகள்) மீது இடியுடன் கூடிய மழை ,மின்னலின் தாக்கத்தை கணித ரீதியாக நிரூபித்தார்.[1][2][3]
இவர் இந்திய அறிவியல் நிறுவனத்தின் மின் , தகவல் தொடர்பு பொறியியல் துறையின் இரண்டாவது தலைவராக (1959-1969) பணியாற்றினார்.[4][5]'எஸ்.வி.சி. ஐயா விருது' இவரது பெயரால் வழங்கப்படுகிறது.[6]மேலும், இவர் தேசிய கல்வி ஆராய்ச்சி , பயிற்சி கவுன்சிலின் முதல் முழுநேர இயக்குநராகவும் இருந்தார்.[7]
தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]எஸ். வி. சந்திரசேகர் ஐயா 1911-இல் பிறந்தார். இவரது தந்தை எஸ். விஷ்காந்த் ஐயா, மைசூர் மகாராஜாவின் சேவையில் இருந்த ஒர் வழக்கறிஞர் ஆவார். பேராசிரியர் ஐயா சிறு வயதாக இருந்தபோதே, இவரது குடும்பத்தினர் தற்போது மகாராஷ்டிரா என்று அழைக்கப்படும் பகுதிக்குக் குடிபெயர்ந்தனர்.
இவர் பம்பாயில் உள்ள எஸ்ப்ளனேட் உயர்நிலைப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியை முடித்தார்; வில்சன் கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தையும், கேம்பிரிட்ஜில் உள்ள கயஸ் கல்லூரியில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார்.[8]
இவர் மீனாட்சி பெலவாடியை மணந்தார்;[9]மீனாட்சி, இந்திய ஊட்டச்சத்து ஆராய்ச்சியாளரான டாக்டர் பவானி பெலவாடியின் சகோதரி ஆவார்.[10][11]நாவலாசிரியர் எஸ். எல். பைரப்பா தனது 'பித்தி' என்ற சுயசரிதையில் எஸ்.வி.சி. ஐயாவுடனான தனது உரையாடல்கள் ,தொடர்புகளை விவரித்துள்ளார். அந்நாவலாசிரியர் பணிபுரிந்த காலத்தில், பேராசிரியருடனும் இவரது மனைவியுடனும் தனக்கு இருந்த நல்லுறவை எஸ். எல். பைரப்பா தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.[12]
தொழில் வாழ்க்கை
[தொகு]பூனா பொறியியல் கல்லூரியில்(சிஓஇபி) பி.இ., எம்.இ., பிஎச்.டி. ஆகிய கல்வித் திட்டங்களைத் தொடங்கியதற்கும், மின்னணுவியல் , தொலைத்தொடர்புப் பொறியியல் ஆய்வகங்களை அடிப்படையிலிருந்தே நிறுவியதற்கும் இவர் காரணமாகத் திகழ்ந்தார். ஆசியாவிலேயே மூன்றாவது பழமையான பொறியியல் கல்லூரியான, அக்காலத்தில் புனேவில் இருந்த ஒரே பொறியியல் கல்லூரியாகவும் விளங்கியது. மேலும், மும்பை, பூனா அகமதாபாத் ஆகிய பல்கலைக்கழகங்களில் இவர் துறைத் தலைவராகவும் பணியாற்றினார்.[13][14]
மேலும் பார்க்கவும்
[தொகு]- வளிமண்டல இரைச்சல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chandrashekhar Aiya, S. V. (August 1955). "Noise Power Radiated by Tropical Thunderstorms". Proceedings of the IRE 43 (8): 966–974. doi:10.1109/JRPROC.1955.278204. பன்னாட்டுத் தர தொடர் எண்:2162-6634. Bibcode: 1955PIRE...43..966C. https://ieeexplore.ieee.org/document/4055530/authors#authors. பார்த்த நாள்: 27 June 2021.
- ↑ Chandrashekhar Aiya, S. V. (December 1956). "Noise Radiation from Tropical Thunderstorms in the Standard Broadcast Band" (in en). Nature 178 (4544): 1249. doi:10.1038/1781249a0. பன்னாட்டுத் தர தொடர் எண்:1476-4687. Bibcode: 1956Natur.178.1249C. https://archive.org/details/sim_nature-uk_1956-12-01_178_4544/page/1249.
- ↑ Aiya, S.V.Chandrashekhar (1954-01-01). "Measurement of atmospheric noise interference to broadcasting" (in en). Journal of Atmospheric and Terrestrial Physics 5 (1–6): 230–242. doi:10.1016/0021-9169(54)90039-2. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9169. Bibcode: 1954JATP....5..230A. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0021916954900392. பார்த்த நாள்: 28 June 2021.
- ↑ "Past Chairs - Department of Electrical Communication Engineering - IISc Bangalore, India". ece.iisc.ac.in. Retrieved 28 June 2021.
- ↑ "Milestones - Department of Electrical Communication Engineering - IISc Bangalore, India". ece.iisc.ac.in. Archived from the original on 27 June 2021. Retrieved 28 June 2021.
- ↑ "SVC Aiya Medal (sec. 2.8)". iete.org. Archived from the original on 5 February 2023. Retrieved 27 June 2021.
- ↑ Aiya, S. V. C. (1991-10-01). "Elimination of Electronics and Metals From Telecommunications by 2000 AD". IETE Journal of Education 32 (4): 121–128. doi:10.1080/09747338.1991.11436340. https://www.tandfonline.com/doi/abs/10.1080/09747338.1991.11436340.
- ↑ Aiya, S. V. C. (1991-10-01). "Elimination of Electronics and Metals From Telecommunications by 2000 AD". IETE Journal of Education 32 (4): 121–128. doi:10.1080/09747338.1991.11436340. https://www.tandfonline.com/doi/abs/10.1080/09747338.1991.11436340.
- ↑ Bhairappa, Es. El (2002). Bhitti (1. saṃskaraṇa ed.). Nayī Dillī: Kitābaghara Prakāśana. pp. Chap 8. ISBN 9788170165491.
- ↑ BHAT, K. SEETHARAM; BELAVADY, BHAVANI (1967-05-01). "Biochemical Studies in Phrynoderma (Follicular Hyperkeratosis): II. Polyunsaturated Fatty Acid Levels in Plasma and Erythrocytes of Patients Suffering from Phrynoderma". The American Journal of Clinical Nutrition 20 (5): 386–392. doi:10.1093/ajcn/20.5.386. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-9165. பப்மெட்:6023849. https://academic.oup.com/ajcn/article-abstract/20/5/386/4787749?redirectedFrom=fulltext. பார்த்த நாள்: 27 June 2021.
- ↑ Belavady, Bhavani (March 1978). Collaborative Research Support Proposal Grain Sorghum And Pearl Millet (PDF). p. 53. Archived from the original (PDF) on 8 February 2017. Retrieved 27 June 2021.
- ↑ Bhairappa, Es. El (2002). Bhitti (1. saṃskaraṇa ed.). Nayī Dillī: Kitābaghara Prakāśana. pp. Chap 8. ISBN 9788170165491.
- ↑ Aiya, S. V. C. (1991-10-01). "Elimination of Electronics and Metals From Telecommunications by 2000 AD". IETE Journal of Education 32 (4): 121–128. doi:10.1080/09747338.1991.11436340. https://www.tandfonline.com/doi/abs/10.1080/09747338.1991.11436340.
- ↑ "College of Engineering Pune (COEP)". www.punepages.com (in ஆங்கிலம்). Retrieved 18 July 2021.