எஸ்-400 ஏவுகணை அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ்-400 என்பது உருசியாவால் உருவாக்கப்பட்ட ஒரு ஏவுகணை அமைப்பு ஆகும்.[1] இது தரையில் இருந்து பாய்ந்து வானில் உள்ள இலக்குகளை அழிக்கக்கூடியதாகும். இது 1990களில் உருவாக்கப்பட்டது.

இது முதன்முதலில் ஏப்ரல் 28, 2007 அன்று பயன்பாட்டுக்கு வந்தது. இந்த ஏவுகணை அமைப்பை வாங்குவதற்கு உருசிய அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்த முதல் நாடு இந்தியாவாகும். அதன்பிறகு சவுதி அரேபியா, துருக்கி, பெலாரஸ் மற்றும் செர்பியா ஆகிய நாடுகளும் இந்த அமைப்பை வாங்குவதற்காக முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.[2][3]

2017 ஆம் ஆண்டு தி எக்கனாமிஸ்ட் பத்திரிகையானது S-400 அமைப்பை "தற்போது தயாரிக்கப்படும் வான் பாதுகாப்பு அமைப்புகளிலேயே ஒரு சிறந்த அமைப்புகளில் ஒன்றாகும்" என குறிப்பிட்டது.[4]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்-400_ஏவுகணை_அமைப்பு&oldid=3546268" இருந்து மீள்விக்கப்பட்டது