எஸ்னிஸ் ஏர்வேஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ்னிஸ் ஏர்வேஸ் மங்கோலியாவின் உலான்பாடாரை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் விமானச் சேவையாகும்.[1] அதிகப்படியான உள்நாட்டு இலக்குகளில் செயல்படுவதால் மங்கோலியாவின் பெரிய உள்நாட்டு விமானச் சேவையாக எஸ்னிஸ் ஏர்வேஸ் உள்ளது. இது சீனா மற்றும் ரஷ்யாவிற்கு சர்வதேச வழித்தடங்களையும் கொண்டுள்ளது. அத்துடன் கஸக்ஸ்தானிற்கு சர்வதேச அளவில் விமானச் சேவை புரியும் அதிகாரத்தினையும் பெற்றுள்ளது. ஆனால் இதுவரையில் அங்கு விமானச் சேவையினை தொடங்கவில்லை.

வரலாறு[தொகு]

2004 ஆம் ஆண்டில், நியூகாம் குழு மங்கோலியாவில் உள்நாட்டு வான்வழி விமானப் போக்குவரத்து நிறுவ வேண்டும் என்று ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. இதன் விளைவாக, ஜனவரி 2006 இல் எஸ்னிஸ் ஏர்வேஸ் நிறுவனத்தினை நிறுவினர். மங்கோலியா வான்வழிப் போக்குவரத்து ஒருங்கிணைப்பு விமானச் சேவையினை புரிவதற்கான அனுமதியினை வழங்கியது. இதனால் தனது தொடக்கவிழாவினை டிசம்பர் 6, 2006 இல் மேற்கொண்டனர்.[2]

2005 முதல் 2006 வரை, எஸ்னிஸ் விமானிகள் ஆஸ்திரேலியாவில் பயிற்சிகளை மேற்கொண்டனர். அதன் பின்னர் ஜப்பான் நாட்டு கைதேர்ந்த விமானிகளிடம் பயிற்சிகளைப் பெற்றனர். குவாண்டாஸ் நிறுவனம் விமானத்தில் உள்ள உதவிபுரியும் குழுவிற்கு அவசர கால செயல்பாடுகளை போதித்தனர். அதேவேளையில் சாப் விமான வழங்கீட்டாளர்கள் விமானப் பராமரிப்பினைப் பற்றி பராமரிப்பாளர்களுக்குக் கற்றுக்கொடுத்தனர். சர்வதேச வான்வழிப் போக்குவரத்து அமைப்பிடம் இருந்து ஆபத்தான பொருட்களை கையாளும் விதங்களையும், போயிங்க் நிறுவனத்திடம் இருந்து பிற சிஆர்எம் பயிற்சிகளையும் எஸ்னிஸ் ஏர்வேஸ் பெற்றனர். ஜிஈ மற்றும் ஹாமில்டன் ஆகியோர் இஞ்சின் மற்றும் விமானத்தின் முன்னோக்கி இருக்கும் காற்றாடி போன்றவற்றிற்கான முழுமையான பராமரிப்பினை எஸ்னிஸ் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு கற்றுக்கொடுத்தனர். எஸ்னிஸ் தனது விமானம், பிற பாகங்களுக்கு முழுமையான காப்பீட்டினை லண்டனின் ஏஓஎன்’னிடமிருந்து பெற்றது. எஸ்னிஸ் ஏர்வேஸில் தோராயமாக 200 பணியாட்கள் உள்ளனர்.

ஜூலை 2008 இல், எஸ்னிஸ் ஏர்வேஸ் ராடிக்ஸ் கணினி முன்பதிவு முறையினை அறிமுகம் செய்தது. இதன் மூலம் இணையவழிப் பயன்பாட்டின் மூலம் சுற்றுலா செயல்பாடுகள், பயண அலுவலகங்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாடுகள் ஆகியவற்றிற்கான முன்பதிவு முறை சாத்தியமானது.

எஸ்னிஸ் ஏர்வேஸ், மங்கோலியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் தனது முழு ஆதிக்கத்தையும் செலுத்த ஆரம்பித்தது. நவம்பர் 2008 இல், தனது ஒரு லட்சமாவது பயணியினை பயணம் செய்ய அனுமதித்ததன் மூலம் இதன் வளர்ச்சி புலப்படும்.

ஆகஸ்ட் 2009 இல், சீனா மற்றும் ஹைலர் ஆகிய நாடுகளுக்கான முதல் சர்வதேச விமானப் போக்குவரத்தினைத் தொடங்கியது. மார்ச் 2010 இல் எஸ்னிஸ் ஏர்வேஸ், மங்கோலியாவின் டோர்னாடில் உள்ள சோபால்சன் வழியாக ஹைலர் செல்லும் வழியினைக் கையாளத் தொடங்கியது. ஜூன் 2010 இல் உலன்-உடே மற்றும் ரஷ்யா ஆகியவை எஸ்னிஸ் ஏர்வேஸின் இரண்டாவது வரையறுக்கப்பட்ட சர்வதேச இலக்குகளாக சேர்க்கப்பட்டன.

எஸ்னிஸ் ஏர்வேஸ், நிறுவனத்தில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினைகளால் தனது செயல்பாடுகளை மே 22, 2014 முதல் நிறுத்திக்கொண்டது. அதிலிருந்து கடந்த இரு ஆண்டுகளாக மீள்வதற்கு முயற்சி செய்துதான் தற்போதிருக்கும் நிலையில் எஸ்னிஸ் ஏர்வேஸ் உள்ளது. எஸ்னிஸ் ஏர்வேஸிற்கு தற்போது உயர்தர வழித்தடங்கள் எதுவுமில்லை.

இலக்குகள்[தொகு]

எஸ்னிஸ் ஏர்வேஸ் பின்வரும் இலக்குகளுக்கு விமானச் சேவையினை செயல்படுத்துகிறது.

  1. சீன மக்களின் குடியரசு
  2. மங்கோலியா
  • கோவ்ட் – கோவ்ட் விமான நிலையம்
  • ஓள்கி – ஓள்கி விமான நிலையம்
  • உலாங்கோம் – உலாங்கோம் விமான நிலையம்
  • உலன் படோர் – சிங்கிஸ் கான் சர்வதேச விமான நிலையம்

விமானக் குழு[தொகு]

எஸ்னிஸ் ஏர்வேஸ் பின்வரும் விமானக் குழுவினைக் கொண்டுள்ளது.

விமானம் சேவையில்

இருப்பவை

ஆர்டர்கள் பயணிகள் வழித்தடங்கள் குறிப்புகள்
வணிக

வகுப்பு

பொருளாதார

வகுப்பு

மொத்தம்
பாம்பார்டியர்

க்யூ400

2 0 0 78 78 உள்நாடு
சாப்

340பி

1 உள்நாடு
மொத்தம் 3 0

ஜனவரி 2009 இல் இந்த விமானச் சேவையின் தலைமை நிர்வாகி க்லென் பிக்கார்ட், எஸ்னிஸ் ஏர்வேஸ்[3] பாம்பார்டியர் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் ஏழு பாம்பார்டியர் சி வரிசை விமானங்களை வாங்குவதற்கான செய்தியினை வெளியிட்டார். ஆனால் இதனை பாம்பார்டியர் அலுவலக ரீதியாக ஒப்புக்கொள்ளவில்லை.

எஸ்னிஸ் ஏர்வேஸ் ஜெட் ரக விமானங்கள் மற்றும் இரு ஏவ்ரோ ஆர்ஜே85 விமானத்தினை அறிமுகப்படுத்த வேண்டுமென 2011 ஆம் ஆண்டில் முடிவு செய்தது. முதலாவது லண்டனில் இருந்து ஜூன் 2011 ஆம் ஆண்டிலும், இரண்டாவது செப்டம்பர் 2011 ஆம் ஆண்டிலும் நிறுவனத்திற்கு கிடைத்தது. ஒரு ஏவ்ரோ விமானம் உலான்பாடார் – ஓயூட் டோல்கோய் வழித்தடத்தினில் செயல்பட்டு வந்தாலும், இரு ஏவ்ரோ விமானங்களும் தொடர்ந்து நிறுவனத்தின் விமானச் சேவையில் இருந்தன. எஸ்னிஸ் ஏர்வேஸின் விமானங்கள் நாட்டின் மேற்குப் பகுதியிலும் (கோவ்ட், உலாங்கோம் மற்றும் உல்கீ) செயல்பட்டன. ஆனால் அங்கு செயல்படத் தேவையான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாக இருக்கத் தொடங்கியதால், பொருளாதார அடிப்படையில் அங்கு செயல்பட முடியாமல்போனது. அதன்பின்னர் எஸ்னிஸ் ஏர்வேஸ் பாம்பார்டியர் டேஷ் 8-க்யூ400 விமானங்களைப் பெற்று அதன் பொருளாதாரத்தினை மீளக் கொண்டுவர வேண்டும் என எண்ணியது. அதேவேளையில் தனது ஏவ்ரோ விமானத்தினைத் தொடர்ந்து சுரங்க வேலைகளுக்கான நிறுவனத்திற்கு செயல்படவும் அனுமதித்தது.

போயிங்க் 737 ரக[4] விமானம் எஸ்னிஸ் ஏர்வேஸின் சர்வதேச வழித்தடங்களான சியோல், பெய்ஜிங்க் மற்றும் ஹாங்காக் ஆகியவற்றிற்காக குத்தகைக்கு விடப்பட்டது. இருப்பினும் எஸ்னிஸ் நிறுவனத்தினால் சர்வதேச வழித்தடங்களை அணுகமுடியவில்லை.

குறிப்புகள்[தொகு]

  1. "Mongolia's Eznis Airways suspends operations indefinitely". ch-aviation.com. 23 May 2014. http://ch-aviation.com/portal/news/28201-mongolias-eznis-airways-suspends-operations-indefinitely. பார்த்த நாள்: 13 October 2015. 
  2. "Eznis Airways Fleet Details and History". planespotters.net. 26 March 2012. https://www.planespotters.net/airline/Eznis-Airways. பார்த்த நாள்: 13 October 2015. 
  3. "Eznis Airways flights". cleartrip.com. http://www.cleartrip.com/flight-booking/eznis-airways-airlines.html. பார்த்த நாள்: 13 October 2015. 
  4. "Enerjet Receives Second Boeing 737-700 from Lessor AWAS". airlinesanddestinations.com. 28 June 2012. http://www.airlinesanddestinations.com/airlines/enerjet-receives-second-boeing-737-700-from-lessor-awas/. பார்த்த நாள்: 13 October 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்னிஸ்_ஏர்வேஸ்&oldid=3630995" இருந்து மீள்விக்கப்பட்டது