எவ்கெனியா புகோசுலாவ்சுகாயா
பேராசிரியர் எவ்கெனியா யாகோவ்லேவ்னா புகோசுலாவ்சுகாயா Yevgenia Yakovlevna Bugoslavskaya | |
---|---|
இயற்பெயர் | Евгения Яковлевна Бугославская |
பிறப்பு | மாஸ்கோ | திசம்பர் 21, 1899
இறப்பு | மே 30, 1960 | (அகவை 60)
குடியுரிமை | சோவியத் ஒன்றியம் |
தேசியம் | உருசியர் |
துறை | வானியல், வானளக்கையியல், சூரிய இயற்பியல் |
பணியிடங்கள் | மாஸ்கோ அரசு பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | மாஸ்கோ அரசு பல்கலைக்கழகம் |
விருதுகள் | வெள்ளியின் குழிப்பள்ளம் ஒன்று இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது |
எவ்கெனியா யாகோவ்லேவ்னா புகோசுலாவ்சுகாயா (Yevgenia Yakovlevna Bugoslavskaya) (21 திசம்பர் 1899 – 30 மே 1960) சோவியத் ஒன்றியக் காலத்து உருசிய வானியலாளர் ஆவார். இவர் வாழ்நால் முழுவதும் வானியலில் ஈடுபட்டார். இறுதியாக, இவர் மாஸ்கோ பல்கலைக்கழகத்தின் வானியல் பேராசிரியரானார்.
ஆங்கிலத்தில் இவரது மாற்றுப் பெயர் Evgeniia Iakovlevna Bugoslavskaia எனவும் வழங்கப்படுகிறது.[1]
வாழ்க்கை
[தொகு]இவர் மாச்கோவில் பிறந்தார். மாஸ்கோ புறநகர்ப் பகுதிகளில் வளர்ந்தார். இவர் இளமை முதலே வானியலில் ஆர்வம் கொண்டிருந்தார். இவரும் இவரது இரட்டைப் பிறப்பாகிய நடால்யாவும் தம் பதினாட்டைப் பருவத்திலேயே பலமுறை நாட்டுப்புறப் பல்கலைக்கழகங்களுக்கான மாஸ்கொ கழகத்தின் உலூப்யான்கா மாவட்ட்த்தில் அமைந்த வான்காணகத்துக்குச் சென்றுவந்துள்ளனர். இந்த வான்காணகம் பொதுமக்கள் கல்வி நோக்கில் அனைவருக்கும் திறந்து விடபாட்ட ஒன்றாகும். இவர் பியானோ வல்லுனரும் பாடகரும் கூட.[2]
இவர் 1924 இல் மாஸ்கோ அரசு பல்கலைக்கழகத்தில் இளவல் பட்டம் பெற்றார். 1925 முதல் 1928 வரை அங்கு வானியல், புவியளக்கையியல் நிறுவனத்தில் வானியல் முதுவர் படிப்பை மேற்கொண்டார். இவர் 1928 முதல் 1932 வரை புவியளக்கை நிறுவனத்தில் பணிபுரிந்தார். இவர் 1932 இல் இருந்து சுட்டென்பர்கு வானியல் நிறுவனத்தில் பணிமேற்கொண்டார். இவர் 1934 இல் இருந்து மாஸ்கோ அரசு பல்கலைக்கழகத்தில் வானியலைக் கற்பித்து வந்தார். பின்னர், இவர் அங்கு 1949 இல் இருந்து பேராசிரியர் ஆனார்.
வாழ்க்கைப்பணி
[தொகு]இவர் "ஒளிப்பட வானளவியல்" எனும் உருசியப் பாடநூலின் ஆசிரியர் ஆவார்.
வெள்ளிக்கோளின் குழிப்பள்ளம் ஒன்று இவரது நினைவாகப் புகோசுலாவ்சுகாயா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "B – Women in Astronomy: A Comprehensive Bibliography (Science Reference Services, Library of Congress)". www.loc.gov. பார்க்கப்பட்ட நாள் 2016-03-05.
- ↑ OBITUARY: Evgenia Y. Bugoslavskaya , Journal: Irish Astronomical Journal, Vol. 9, p. 163
- Reports on Astronomy edited by Jacqueline Bergeron, Springer Science & Business Media, 2012 . Springer Science & Business Media, 2012. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9401111006
- Bronshten, Vitali A., and Mikhail M. Dagaev. Evgeniia Iakovlevna Bugoslavskaia. In Vsesoiuznoe astronomo-geodezicheskoe obshchestvo. Biulleten', no. 29 (36), 1961: 57–59. port. QB1.V752, no. 29 (36)
- Bugoslavskaia, Evgeniia Iakovlevna. In Kolchinskii, Il'ia G., Alla A. Korsun', and Modest G. Rodriges. Astronomy; biograficheskii spravochnik. Izd. 2, dop. i perer. Kiev, Naukova dumka, 1986. p. 58–59. port. QB35.K58 1986
- Evgeniia Iakovlevna Bugoslavskaia (1899–1960). In Astronomicheskii kalendar'. Peremennaia ch. vyp. 64; 1961. Moskva, Gos. izd-vo fiziko – matematicheskoi literatury, 1960. p. 317–318. port. QB9.A75, 1961