எழுவாய்-பயனிலை-செயப்படுபொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொழியியல் உருவியத்தில், எழுவாய்-பயனிலை-செயப்படுபொருள் என்பது ஒரு வகை வாக்கிய அமைப்பைக் குறிக்கும். இந்த வாக்கிய அமைப்பில் எழுவாய் முதலாவதாகவும், பயனிலை இரண்டாவதாகவும் செயப்படுபொருள் மூன்றாவதாகவும் அமையும். முருகன் போகிறான் வீட்டுக்கு என்ற வடிவம் இத்தகைய அமைப்பில் உள்ளது.

பேசுகின்றவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கும்போது உலகின் மிகப் பொதுவாகக் காணப்படுவது எ.ப.செ ஒழுங்கே. அதேவேளை அறியப்பட்ட மொழிகளுள் இரண்டாவது அதிகமான மொழிகளில் பயன்படுவதும் இந்த ஒழுங்கே. எ.ப.செவும், எ.செ.பவும் சேர்ந்து உலகின் 75% மொழிகளை உள்ளடக்குகின்றன.[1] எ.ப.செ ஒழுங்கே கிரியோல் மொழிகளில் பொதுவாகக் காணப்படுகிறது. இது, மனித உளவியலுக்கு முதன் முதலில் வெளிப்படையாகத் தெரிவது எ.ப.செ ஒழுங்காக இருக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது.[2]

எ.ப.செ மொழிகள்[தொகு]

சொல்
ஒழுங்கு
தமிழ்
ஒப்புமை
மொழிகளின்
வீதம்
எ.கா
மொழிகள்
எ.செ.ப "அனுமன் சீதையை கண்டான்." 45% 45
 
பஷ்தூ, இலத்தீன், சப்பானியம், ஆப்பிரிக்கானாசு
எ.ப.செ "அனுமன் கண்டான் சீதையை." 42% 42
 
ஆங்கிலம், அவுசா, மாண்டரின், உருசியம்
ப.எ.செ "கண்டான் அனுமன் சீதையை." 9% 9
 
விவிலிய எபிரேயம், ஐரியம், பிலிப்பினோ, துவாரெக்
ப.செ.எ "கண்டான் சீதையை அனுமன்." 3% 3
 
மலகாசி, பவுரே
செ.ப.எ "சீதையை கண்டான் அனுமன்." 1% 1
 
அப்பாலை?, இக்சுக்காரியானா?
செ.எ.ப "சீதையை அனுமன் கண்டான்." 0% வராவோ

உலக மொழிகளிலுள்ள சொல் ஒழுங்கின் அலையெண் பரம்பல்
1980ல் ரஸ்செல் எஸ். தொம்லின் என்பவரால் அளவிடப்பட்டது.[3][4]

அல்பேனியம், அரபு, அசிரியம், பெர்பர், பல்கேரியம், சீனம், ஆங்கிலம், எசுத்தோனியம், பிலிப்பினோ, பின்னியம், பிரெஞ்சு, குர்டியம், லுகண்டா, கிரேக்கம், அவுசா, நவீன எபிரேய, இத்தாலியம், ஜாவனியம், காசுமீரி, கெமர், லத்வியம், மசிடோனியம், போலியம், கசுபியம், போர்த்துக்கேயம், குயிச், உரோமானியம், ரொட்டுமன், உருசியம், செர்போ குரோசியம், எசுப்பானியம், சுவாகிலி, தாய், வியட்நாமியம், யொருபா, சூலு போன்றவை எ.ப.செ மொழிகள் எனக்கொள்ளப்படும் மொழிகளுள் அடங்குகின்றன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]