உள்ளடக்கத்துக்குச் செல்

எழுத்து மாறாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எழுத்து மாறாட்டம் (Spoonerism) என்பது சொல்ல வரும் வசனத்தின் முன்னெழுத்து அல்லது ஓசைகளை மாற்றிப் போட்டு எழுதப்படும் ஒரு வகையான வசன நடை. இது வார்த்தை விளையாட்டுகளுள் ஒன்றாக இருந்தாலும் பெரும்பாலும் வாய்க்குளறலாக ஏற்படுகிறது. இந்த எழுத்து மாறாட்டம் நகைச்சுவையாகவும் இலை மறை காயாகச் சொல்லவும் பயன்படுகிறது. ஆங்கிலத்தில் வில்லியம் ஸ்பூனர் நினைவாக இதற்கு ஸ்பூனரிசம் என்று பெயரிட்டுள்ளனர்.[1] தணிக்கையிலிருந்து தப்பிக்க அரசியல் பெயர்களை இம்முறையில் சொல்வதுண்டு.

தமிழ்த் திரைப்படங்கள்

[தொகு]

தமிழ்த் திரைப்படங்களில் இந்த எழுத்து மாறாட்டம் நகைச்சுவைக் காட்சிகளில் கிரேசி மோகன் போன்ற வசனக்கர்த்தாக்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சதந்திரம் திரைப்படத்தில் ‘துப்பியிலெ மூஞ்சிட்டானா’ (மூஞ்சியிலெ துப்பிட்டானா), ‘பர்தார்ஜி சாடி’ (சர்தார்ஜி பாடி), ‘பர்ஸ் அடிக்க போன இடத்தில், பிஸ்ஸ மறந்துட்டு’ (பிஸ் அடிக்க போன இடத்தில், பர்ஸ்ஸ மறந்துட்டு) போன்ற வசனங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.[2]


இவற்றையும் பார்க்கலாம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Brown, Keith (2006). Encyclopedia of Language & Logistics (2nd ed.). Elsevier Ltd. ISBN 978-0-08-044854-1.
  2. "பஞ்சதந்திரம் நகைச்சுவைக் காட்சிகள்". சன் நெக்ஸ்ட். Retrieved 2026-08-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எழுத்து_மாறாட்டம்&oldid=4621161" இலிருந்து மீள்விக்கப்பட்டது