எழுத்துவர்த்தனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எழுத்துவர்த்தனம் என்பது சித்திரக்கவி வகைகளில் ஒன்று. பாடலில் எழுத்தின் விரிவு வளரும்.

எடுத்துக்காட்டு

மாத்திரை ஓரெழுத்துச் சொல்லும்,மற் றொன்று
நிரப்பிட நீரிற்பூ ஒன்றாம் – நிரப்பிய
வேறோர் எழுத்துய்க்க வீரரா சேந்திரனாட்(டு)
ஆறாம் எனவுரைக்க லாம். [1]

இதன் விரிவுப் பாங்கு

மாத்திரை ஓரெழுத்துச் சொல்லும் – கா
மற்றொன்று நிரப்பிட நீரிற்பூ ஒன்றாம் – காவி (என்னும் பூ)
நிரப்பிய வேறோர் எழுத்துய்க்க வீரராசேந்திரன் நாட்டு ஆறாம் - காவிரி

குறிப்புகள்[தொகு]

  1. பெருந்தேவனார் வீரசோழிய உரை மேற்கோள் பாடல்

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு இரண்டாம் பாகம், பதிப்பு 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=எழுத்துவர்த்தனம்&oldid=1298826" இருந்து மீள்விக்கப்பட்டது