எழுத்துரு தவிர்த்த பயனர் இடைமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எழுத்துரு தவிர்த்த பயனர் இடைமுகம் (text-free user interface) என்பது முற்றிலும் வரைகலை இடைமுகத்தைக் கொண்டு எந்தவொரு மொழியின் எழுத்துருக்களும் இல்லாது வடிவமைக்கப்பட்ட இடைமுகம் ஆகும். எழுதப்பட்ட மொழியை புரிந்துகொள்ள வியலாத பயனர்கள், காட்டாக சிறுவர்கள், உள்நாட்டு மொழிகளில் மொழிமாற்றம் செய்யவியலாத பன்னாட்டு இடைமுகங்கள் மற்றும் எழுத்தறிவில்லோதோர், செயல்பாட்டிற்காக இவ்வகை இடைமுகம் மிகப் பயனுடையதாக இருக்கும். பல்வேறு மக்களிடையே எண்ணிம இடைவெளியைக் குறைக்கவும் எழுத்தறிவில்லதோரும் கணினி/நகர்பேசி வசதிகளை துய்க்கவும் இது வாய்ப்பளிக்கும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Medhi, I.; Sagar, A.; Toyama, K. (1 May 2006). "Text-Free User Interfaces for Illiterate and Semi-Literate Users". 2006 International Conference on Information and Communication Technologies and Development. பக். 72–82. doi:10.1109/ICTD.2006.301841. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4244-0484-1.