எழுத்துணர்வு
Appearance
எழுத்துணர்வு அல்லது எழுத்து உணரும் நிலை (Case Sensitivity) என்பது கணினிகள் ஒரு மொழியிலுள்ள எழுத்துக்களின் (பெரிய மற்றும் சிறிய எழுத்துகள்) வரிவடிவ வேறுபாட்டை உணர்வதாகும் ஆங்கிலம் முதலிய உலக மொழிகள் இத்தன்மையைப் பெற்றுள்ளன. இந்திய மொழிகளில் இத்தன்மை இல்லை.
துறைகளின் பயன்பாடுகள்
[தொகு]- தேடல் பயனர்கள் தாங்கள் பயன்படுத்தும் இயக்கமுறைக்கு (System) ஏற்ப தாம் தேடும் சொற்கள் சரியான எழுத்துணர்வுடன் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கின்றனர் பயனர்கள் Dog என்ற சொல்லை ஒரு இணைய இதழில் தேடுகிறார்கள் என்றால் அது Dog மற்றும் dog ஆகிய சொற்களின் இடையே எழுத்துக்களில் எந்த வேறுபாட்டை காட்டமல் அச்சொற்கள் எங்கு இருந்தாலும் தெரிவும் படி காட்டும்.
சில நேரங்களில் பயனர்கள் ஒரு நிறுவனத்தின் பெயர்,வணிகச் சின்னங்கள், மனிதரின் பெயர்கள்,நகரங்களின் பெயர்கள் ஆகியவற்றை ஒரு வேளை தேட விரும்பினால் எழுத்துணர்வு செயல்பாடு பொருத்தமற்ற விடைகளை கண்டறிந்து தரும்
நிரலாக்க மொழிகளில்
[தொகு]சி, சி++, ஜாவா, சி சாப், ரூபி, பைத்தான், ஷிப்ட் போன்ற சில நிரலாக்க மொழிகளில் இந்த எழுத்துணர்வுத் தன்மையைக் காணலாம்.[1][2] அடா, பேசிக், பிபிசி பேசிக், போர்ட்ரான், வினவல் அமைப்பு மொழி (மைக்ரோசாப்ட் சீக்குவல் வழங்கி) போன்ற நிரலாக்க மொழிகளில் இந்த எழுத்துணார்வுத் தன்மை இல்லை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kernighan, Brian W.; Ritchie, Dennis M. (February 1978). "Chapter 2: Types, Operators and Expressions". The C Programming Language (1st ed.). Englewood Cliffs, NJ: Prentice Hall. p. 33. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-13-110163-3.
- ↑ Matsumoto, Yukihiro (January 2002). "Chapter 2: Language Basics". Ruby in a nutshell (1st ed.). O'Reilly Media. p. 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-596-00214-9.