எழுத்துக் குறியேற்ற முன்னெடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எழுத்துக் குறியேற்ற முன்னெடுப்பு (எ.கு.மு) (Text Encoding Initiative (TEI)) என்பது எழுத்தை முதன்மைப்படுத்தும் ஒரு எண்ணிம மனிதவியல் துறைசார் சமூகம் (community of practice) ஆகும். இந்தச் சமூகம் 1980கள் தொடக்கம் தொடர்ச்சியாக இயங்கி வருகின்றது. தற்போது இவர்கள் மின்னஞ்சல் பட்டியல், சந்திப்புக்கள், மாநாடுகள், ஆய்வேடு, துறைசார் விக்கி, நிரல் களஞ்சியங்கள், கருவியாக்கம் ஆகியவற்றை நடாத்துகின்றனர். இவர்கள் விரிவான ஒரு நுட்பச் சீர்தரத்தை பராமரிக்கின்றனர். இந்தச் சீர்தரமும் எழுத்துக் குறியேற்ற முன்னெடுப்பு என்ற பெயரிலேயே அறியப்படுகின்றது.

எ.கு.மு வழிகாட்டிகள்[தொகு]

எ.கு.மு வழிகாட்டிகள் (TEI Guidelines) என்று அறியப்படும் சீர்தரம் ஒரு எழுத்தை பொருள்சார்ந்து குறியேற்றப் பயன்படுகின்றது. ஒவ்வொரு சிட்டை (tag) அல்லது உறுப்பினதும் (element), பண்புகளினதும் (attributes) பொருளும் விளக்கமும் குறிப்பாகத் தரப்படுகிறது.

எடுத்துக்காட்டுக்கள்[தொகு]

உரைச் சிட்டைகள்[தொகு]

எ.கு.மு எழுத்தை எந்த தேவையான அளவு பிரிவுகளுடனும் குறியேற்ற அனுமதிக்கின்றது. எ.கா பின்வரும் பத்தி வசனங்களாகவும் (s), சொற்றொடர்களாக்வும் (clauses) ஆகவும் குறியேற்றப்பட்டுள்ளது.[1]

 <s>
  <cl>It was about the beginning of September, 1664,
  <cl>that I, among the rest of my neighbours,
       heard in ordinary discourse
   <cl>that the plague was returned again to Holland; </cl>
   </cl>
  </cl>
  <cl>for it had been very violent there, and particularly at
     Amsterdam and Rotterdam, in the year 1663, </cl>
  <cl>whither, <cl>they say,</cl> it was brought,
  <cl>some said</cl> from Italy, others from the Levant, among some goods
  <cl>which were brought home by their Turkey fleet;</cl>
  </cl>
  <cl>others said it was brought from Candia;
     others from Cyprus. </cl>
 </s>
 <s>
  <cl>It mattered not <cl>from whence it came;</cl>
  </cl>
  <cl>but all agreed <cl>it was come into Holland again.</cl>
  </cl>
 </s>

பாடல்[தொகு]

ஒரு பாடலை அல்லது பாவை குறியேற்றத் தேவையான சிட்டைகளை எ.கு.மு கொண்டுள்ளது. பின்வரும் எடுத்துக்காட்டு ஒரு பிரெஞ்சுச் செய்யுளின் குறியேற்றம் ஆகும்.[2]

<div type="sonnet">
 <lg type="quatrain">
  <l>Les amoureux fervents et les savants austères</l>
  <l> Aiment également, dans leur mûre saison,</l>
  <l> Les chats puissants et doux, orgueil de la maison,</l>
  <l> Qui comme eux sont frileux et comme eux sédentaires.</l>
 </lg>
 <lg type="quatrain">
  <l>Amis de la science et de la volupté</l>
  <l> Ils cherchent le silence et l'horreur des ténèbres ;</l>
  <l> L'Érèbe les eût pris pour ses coursiers funèbres,</l>
  <l> S'ils pouvaient au servage incliner leur fierté.</l>
 </lg>
 <lg type="tercet">
  <l>Ils prennent en songeant les nobles attitudes</l>
  <l>Des grands sphinx allongés au fond des solitudes,</l>
  <l>Qui semblent s'endormir dans un rêve sans fin ;</l>
 </lg>
 <lg type="tercet">
  <l>Leurs reins féconds sont pleins d'étincelles magiques,</l>
  <l> Et des parcelles d'or, ainsi qu'un sable fin,</l>
  <l>Étoilent vaguement leurs prunelles mystiques.</l>
 </lg>
</div>

தெரிவுச் சிட்டைகள்[தொகு]

ஒரு எழுத்தின் குறிப்பிட்ட பகுதிகள் வெவ்வேறு வகைகளில் புரியப்பட வேண்டும் எனில், எ.கு.மு choice சிட்டைகளைப் பயன்படுத்தி அந்தத் தெரிவைக் குறியேற்ற முடியும். பின்வரும் எடுத்துக்காட்டில் choice சிட்டைகள் இருமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. முதல் முறை சரியான ஆண்டைக் குறிக்கவும். இரண்டாவது முறை அசல் மற்றும் சீரான சொற்கூட்டலைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.[3]

<p xml:id="p23">Lastly, That, upon his solemn oath to observe all the above
articles, the said man-mountain shall have a daily allowance of
meat and drink sufficient for the support of <choice>
  <sic>1724</sic>
  <corr>1728</corr>
 </choice> of our subjects,
with free access to our royal person, and other marks of our
<choice>
  <orig>favour</orig>
  <reg>favor</reg>
 </choice>.

மேற்கோள்கள்[தொகு]

  1. "17 Simple Analytic Mechanisms - TEI P5: — Guidelines for Electronic Text Encoding and Interchange". tei-c.org. 2012. பார்க்கப்பட்ட நாள் 15 April 2012.
  2. "TEI element lg (groupe de vers)". tei-c.org. 2012. Archived from the original on 6 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 15 April 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "TEI element choice". tei-c.org. 2012. பார்க்கப்பட்ட நாள் 15 April 2012.

வெளி இணைப்புகள்[தொகு]