உள்ளடக்கத்துக்குச் செல்

எழுது கருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதினான்காம் நூற்றாண்டில் எழுத்தில் பயன்படுத்தப்பட்ட ஸ்டைலி.

எழுது கருவி (Writing implement) என்பது எழுத்தை உருவாக்க பயன்படும் ஒரு கருவி. எழுதுதல் செயலானது வெவ்வேறு படங்கள், கோடுகள் மற்றும் வடிவங்களைக் கொண்டுள்ளது. இந்த உருப்படிகளில் பெரும்பாலானவை ஓவியம், வரைதல், தொழில்நுட்ப வரைதல் போன்ற பிற செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படலாம். ஆனால் எழுதும் கருவிகள் பொதுவாக மென்மையான, கட்டுப்படுத்தக்கூடிய கோட்டை உருவாக்கும் சாதாரணத் தேவையைக் கொண்டவை.

ஒரு சிறிய மக்கள்தொகையால் பயன்படுத்தப்படும் மற்றொரு எழுத்து நடைமுறை, பார்வையற்றவர்கள் பிரெயிலில் உள்ள புள்ளிகளைத் துளைக்க சிலேட்டுடன் இணைந்து பயன்படுத்தும் கூராணி ஆகும். [1]

எழுதுகருவிகள் ஒரு உள்ளார்ந்த செயல்பாட்டைக் கொண்டுள்ளன. அவற்றின் பயன் அவற்றின் தோற்ற நீளத்திற்கேற்றமையும். அதாவது பயனற்ற பொருட்களாக நீடிக்காது.

நிறமியற்றவை

[தொகு]

இரண்டாவதான ஒரு பொருள்கொண்டு நிறமியைப் பயன்படுத்துவதை விட, பழங்காலத்தில் ஒரு தட்டையான மேற்பரப்பை ஒரு கடினமான கருவியால் கீறுவதன் மூலம் எழுத்துகள் உருவாக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக, சீன ஜியாகுவென் ஆமை ஓடுகளில் செதுக்கப்பட்டுள்ளது. இத்தகையவை கலைப்பொருட்களின் நிலைத்தன்மையைக் குறித்தாலும் எழுது கருவியின் நுட்ப மேம்பாட்டைக் காட்டவில்லை. லாஸ்காக்கில் உள்ள குகை ஓவியங்கள் போன்ற வரலாற்றுக்கு முந்தைய குகை ஓவியங்களில் நிறமியின் பயன்பாடுகள் காணப்படுகின்றன.

பண்டைய சுமேரியர்களும் அவர்களின் அடுத்தடுத்த கலாச்சாரத்தினரான பாபிலோனியர்கள் போன்றவர்களும் ஒரு கூராணியை மென்மையான களிமண் பலகைகளில் அழுத்துவதன் மூலம் ஆப்பு வடிவ அடையாளங்களை உருவாக்கி அவற்றில் கியூனிஃபார்ம் எழுத்தை உருவாக்கினர். பலகையைக் கடினப்படுத்துவதற்கும் அடையாளங்களை நிரந்தரமாக பாதுகாக்கவும் களிமண் பலகைகள் சுடப்பட்டன.

மைசீனியன் கிரீஸ் போன்ற பல பழங்கால கலாச்சாரங்களும் தங்கள் பதிவுகளை களிமண் பலகைகளில் பொறித்தாலும் பலகைகளைச் சுடவில்லை. தற்செயலாக நிகழ்ந்த ஒரு பேரழிவுத் தீயினால் மினோவான் க்ரீட்டிலிருந்து வந்த லீனியர் பி தரவின் பெரும்பகுதிகள் கடுமையாக சுடப்பட்டன. ரோமானியர்கள் மெழுகு பலகைகளுடன் காரீய கூராணியைப் பயன்படுத்தினர். மெழுகுப்பலகைகளின் மேற்பரப்பைமென்மையாகத் தேய்ப்பதன்மூலம் உருவாக்கிய எழுத்துருக்களை அழிக்க முடியும்.

தற்காலத்தில் கைக் கணினிகள் மற்றும் வேறு சில கணினி உள்ளீட்டு சாதனங்கள், திரையில் தகவல்களைப் பதிவுசெய்ய நிறமிப் பயன்பாட்டிற்குப்பதில் அழுத்ததைப் பயன்படுத்தும் எழுத்தாணிகளைப் பயன்படுத்துகின்றன.

வெள்ளி ஸ்டான்லி கோப்பையில் பொறிக்கப்பட்ட வெற்றியாளர்களின் பெயர்கள் ,லிங்கன் மெமோரியலின் கல் சுவரில் செதுக்கப்பட்ட கெட்டிஸ்பர்க் முகவரி போன்ற நினைவுப் பொருட்களில் சொற்களும் பெயர்களும் இப்பொழுதும் பொறிக்கப்படுகின்றன. இவற்றுக்குத் தேவையான கருவிகள் எழுதும் கருவிகளாக மட்டுமே கருதப்படுவதில்லை.

நிறமி கொண்டவை

[தொகு]
3 -4-ஆம் நூற்றாண்டு எழுத்து, ஜோர்ஜியாவின் மெட்ஸ்கெட்டா .

பண்டைய ரோமானியர்கள் பயன்படுத்திய லீடன் கூராணியே தற்போதைய கரிக்கோலின் மூலவடிவமாகும். ரோமானியர்கள் லீடன் கூராணியைக் கொண்டு மரம் அல்லது பாப்பிரஸ் மீது கருமையான கோட்டுருக்களைப் பதித்து எழுதினர். தற்காலத்தில் மையற்ற பேனாக்கள் உருவாக்கத்தில் இந்த உத்தி பயன்படுத்தப்படுகிறது. மையற்ற பேனாக்களில் ஒரு காரீயஉலோகக் கலவை, தாளின் மேற்பரப்பில் சிறுசிறு பகுதிகளை நீக்கித் தாளில் இருண்ட அடையாளங்களை ஏற்படுத்துகிறது.

பெரும்பாலான நவீன "காரீயப் பென்சில்கள் " விஷமற்ற சாம்பல்-கருப்புநிற கிராஃபைட்டு மற்றும் களிமண் கலவையை முக்கியப் பாகமாகக் கொண்டுள்ளன. உடைந்துவிடாமல் இருப்பதற்காகவும் பயன்படுத்துவோரின் கைகளில் ஒட்டாமல் இருக்கும்வகையிலும் இப்பாகமானது மர உறைக்குள் வைக்கப்பட்டுள்ளது.

பள்ளி அறைகளில் கரும்பலகையில் எழுத வெள்ளை சுண்ணக்கட்டி பயன்படுத்தப்படுகிறது. 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் காகிதம் எளிதில் கிடைக்காதபோது, தனிப்பட்ட மாணவர்களும் தங்கள் சொந்த சிறிய சிலேட்டுகளில் சுண்ணக்கட்டிகளைக் கொண்டு எழுதினர்.

பென்சில்கள் மற்றும் சுண்ணக்கட்டிகள் இரண்டும் பல வண்ணங்களில் அடையாளங்களை உருவாக்கக்கூடியவகையில் கிடைக்கின்றன. ஆனால் அவை எழுது கருவிகளாகக் கருதப்படாமல் கலைப்பொருட்களை உருவாக்குபவையாகக் கருதப்படுகின்றன. குழந்தைகள் வண்ணமயமான மெழுகு வண்ணத்தீட்டுக்கோல்களைத் தங்கள் படங்களில் சொற்களை எழுத பயன்படுத்தினாலும், எழுதுவதற்குப் பயன்படும் முதன்மைப் பொருளாக அவை கருதப்படுவதில்லை

ஒரு மெழுகுப் பென்சில் வண்ணத்தீட்டுக்கோலையும் கரிக்கோலையும் ஒத்தது. இதில் வண்ணமயமான மெழுகுப்பொருள் காகித உறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இதன் விகிதாச்சாரங்கள் ஒரு சாதாரணக் கரிக்கோலுடன் ஒத்துள்ளது. துவக்கத்தில் மெழுகுப் பென்சில்கள் பீங்கான் அல்லது கண்ணாடி போன்ற மேற்பரப்புகளில் எழுதப் பயன்படுத்தப்பட்டன.

சாதாரணக் கரிக்கோல்கள், சுண்ணக்கட்டிகள், வண்ணத்தீட்டுக்கோல்கள் அனைத்தும் அவற்றின் முழுவுருவும் தீர்ந்துபோகும்வரை செயற்படும் திறனுள்ளவை. கரிக்கோலப் பயன்படுத்தும்போது அதன் கிராபைட்டு கலவைப்பகுதியை மரவுறையை விட்டு வெளிப்படுத்துவதற்கு கரிக்கோல் கூராக்கிகள் தேவைப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "What is Braille?". American Foundation for the Blind. Archived from the original (web) on 2007-11-19. பார்க்கப்பட்ட நாள் 2008-02-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எழுது_கருவி&oldid=3546112" இலிருந்து மீள்விக்கப்பட்டது