எழிலரசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எழிலரசி (பிறப்பு: மார்ச் 20, 1968), தமிழ்ப் பெண் கவிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் பிறந்தவர். வே.மு.பிச்சாண்டி, சரஸ்வதி ஆகியோர் இவரது பெற்றோர். தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். 'தொடக்க காலத் தமிழ் நாவல்களில் பெண் சித்திரிப்பு' என்பது இவரது ஆய்வாகும். ஸ்திரீ தர்மம் என்னும் பெண்களுக்கான இதழ் குறித்து எம்.பிஎல் பட்டத்திற்கு ஆய்வு செய்துள்ளார். நாட்டுப்புறவியல் பட்டயச் சான்றிதழ் ஆய்வுக்காகக் குயவர் குடும்பம் ஒன்றை இனவரைவியல் நோக்கில் பதிவு செய்துள்ளார். தற்போது அரசு கலைக்கல்லூரி ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார். காலச்சுவடு, தக்கை, ஆனந்த விகடன் முதலிய இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகி உள்ளன. இவரது கவிதைத் தொகுப்பு 'மிதக்கும் மகரந்தம்' என்பதாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எழிலரசி&oldid=656218" இருந்து மீள்விக்கப்பட்டது