எளிய மொழி
Appearance
எளிய மொழி (plain language) என்பது படிப்பவருக்கு முடிந்தவரை விரைவாகவும், எளிதாகவும், முழுமையாகவும் புரியும் வகையில் வடிவமைக்கப்பட்டது.[1] எளிய மொழி படிக்கவும், புரிந்துகொள்ளவும், பயன்படுத்த எளிதாகவும் இருக்க முயற்சிக்கிறது.[2] இது தேவைக்கு அதிக சொற்களைக் கொண்ட, மிக நீளமான, சுற்றி வளைத்துச் சொல்கிற, சிக்கலான சொற்றொடரைத் தவிர்க்கிறது. பல நாடுகளில், திட்டங்கள் மற்றும் சேவைகளுக்கான அணுகலை அதிகரிக்க, பொது நிறுவனங்கள் எளிய மொழியைப் பயன்படுத்துவதை அந்தந்த நாட்டின் சட்டங்களின் மூலம் கட்டாயப்படுத்துகின்றன. ஐக்கிய நாடுகளின் ஊனமுற்றோர் உரிமைகள் சாசனம் அதன் தகவல்தொடர்பு வரையறையில் எளிய மொழியை உள்ளடக்கியுள்ளது.[3]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Robert Leon Cooper (1989). Language Planning and Social Change. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-33641-3.
Plain Language Movement.
- ↑ Garner, Bryan A. (2009). Garner on Language and Writing: Selected Essays and Speeches of Bryan A. Garner. Chicago: American Bar Association. p. 295. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60442-445-4.
- ↑ ஐக்கிய நாடுகள் பொதுச் சபை. Convention on the Rights of Persons with Disabilities பரணிடப்பட்டது 2016-12-02 at the வந்தவழி இயந்திரம், Article 2 - Definitions. 13 December 2006, A/RES/61/106, Annex I. Retrieved 21 January 2014.