எளிய மின்கலம் அல்லது வோல்ட் மின்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எளிய மின்கலம் அல்லது வோல்ட் மின்கலம்[தொகு]

வோல்ட் மின்கலத்தில், கண்ணாடிப் பாத்திரம் ஒன்றினுள் உள்ள நீா்த்த கந்தக அமிலத்தினுள் இரு மின்வாய்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒரு மின்வாய் தாமிரத்தாலானது மற்றொன்று துத்தநாகத்தாலானது. மின்கலத்திற்கு வெளியே, மின்வாய்கள் கம்பியால் இணைக்கப்படும் போது, மின்னோட்டம், வெளிச்சுற்றில் தாமிரத்திலிருந்து துத்தநாகத்திற்கும், மின் கலத்தினுள் துத்தநாகத்திலிருந்து தாமிரத்திற்கும் பாயும். மின்கலத்தின் நோ்முனை (அ) ஆனோடாக தாமிரமும், எதிா்முனை அல்லது கேதோடாக துத்தநாகமும் அமையும். நீா்த்த கந்தக அமிலம் மின்பகு திரவமாகும்.

மின்னூட்டம் பெற்ற அயனிகளின் இயக்கத்தின் அடிப்படையில் மின்கலத்தின் செயற்பாடு விளக்கப்படுகிறது. எதிா் மின்வாயில் துத்தநாக அணுக்கள் அயனியாக்கப்பட்டு Zn++ அயனிகளாக கரைசலினுள் செல்லுகின்றன. இதனால் எதிா் மினவாய் இரு எலக்ட்ரான்களைப் பெற்று எதிா் மின்னூட்டம் உடையதாகிறது. அதே சமயத்தில் தாமிர நோ்மின்வாயில் இருந்து இரு எலக்ட்ரான்களை எடுத்துக் கொண்டு, இரு ஹைட்ரஜன் அயனிகள் 2H+ வெளிப்படுகின்றன.இதனால் தாமிரம் நோ்மின்னூட்டம் உடையாகிறது. துத்தநாகத்தில் அதிகப்படியான எலக்ட்ரான்கள் இருக்கும் வரை இந்நிகழ்வு தொடா்ந்து நிகழும்.ஆதலால் வெளிச்சுற்றில் மின்னோட்டம் பாயும்.

எனவே,இந்த எளிய மின்கலன் தொடா்ந்து வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றித் தரும் அமைப்பாக செயற்படுகிறது. இரு தகடுகளிலும் உள்ள எதிரெதிா் மின்னூட்டங்களின் காரணமாக தாமிரம் மற்றும் துத்தநாகத் தகடுகளுக்கிடையே மின்னழுத்த வேறுபாடு தோற்றுவிக்கப்படுகிறது. இங்கு தாமிரம்தி துத்தநாகத்தை விட அதிக மின்னழுத்தத்தில் அமையும். இரு மின்வாய்களுக்கு இடைப்பட்ட மின்னழுத்த வேறுபாடு 1.08V ஆகும்.

எளிய மின்கலம் அல்லது வோல்ட் மின்கலம்

மேற்கோள்கள்[தொகு]

1. மேல்நிலை - இரண்டாம் ஆண்டு, தமிழ்நாடு பாடநூல் கழகம், சென்னை - 600006

2."battery" (def. 4b), Merriam-Webster Online Dictionary (2008). Retrieved 6 August 2008.

3. Keithley, Joseph F (1999). Daniell Cell. John Wiley and Sons. pp. 49–51. ISBN 0-7803-1193-0.

4. Kipnis, Nahum (2003) "Changing a theory: the case of Volta's contact electricity", Nuova Voltiana, Vol. 5. Università degli studi di Pavia, 2003 ISBN 88-203-3273-6. pp. 144–146

5. Clarke, Edwin; Jacyna, L. S. (1992) Nineteenth-Century Origins of Neuroscientific Concepts, University of California Press. ISBN 0-520-07879-9. p. 199

6. "Milestones:Volta's Electrical Battery Invention, 1799". IEEE Global History Network. IEEE. Retrieved 26 July 2011.