உள்ளடக்கத்துக்குச் செல்

எல்2: எம்புரான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எல்2: எம்புரான்
திரையரங்க வெளியீட்டுச் சுவரொட்டி
இயக்கம்பிரித்விராஜ் சுகுமாரன்
தயாரிப்புஆண்டனி பெரும்பாவூர், கோகுலம் கோபாலன்
கதைமுரளி கோபி
இசைதீபக் தேவ்
நடிப்புமோகன்லால்
ஒளிப்பதிவுசுஜித் வாசுதேவ்
படத்தொகுப்புஅகிலேஷ் மோகன்
கலையகம்ஆஷீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவீஸ், லைக்கா தயாரிப்பகம்
வெளியீடு27 மார்ச் 2025 (2025-03-27)
ஓட்டம்179 நிமிடங்கள் [1]
நாடுஇந்தியா
மொழிமலையாளம்
ஆக்கச்செலவுஉத்தேசமாக ₹180 கோடி[2]
மொத்த வருவாய்₹200 கோடி (4 நாட்கள்)[3]

எல்2: எம்புரான் (L2: Empuraan), 2025 ஆம் ஆண்டு வெளியான மலையாள மொழி அதிரடித் திரைப்படமாகும். பிரித்விராஜ் சுகுமாரன் இயக்க, முரளி கோபி எழுதிய இத்திரைப்படத்தை, ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ், லைகா புரொடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இது 2019-ஆம் ஆண்டு வெளிவந்த லூசிஃபர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இப்படத்தில் மோகன்லால், பிருத்விராஜ் சுகுமாரன், அபிமன்யு சிங், டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர், ஆண்ட்ரியா திவதர், ஜெரோம் பிளின், இந்திரஜித் சுகுமாரன், எரிக் எபோனே, சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் நடித்துள்ளனர். [4]

கதை

[தொகு]

2002-இல் குஜராத் கலவரத்தின் போது, இளம் சாயித் மசூதின் குடும்பம் இந்துத்துவ தீவிரவாதக் கும்பல் ஒன்றால் கொடூரமாகக் கொல்லப்படுவதை அவன் காண்கிறான். அந்தக் கும்பலை பல்ராஜ் என்பவன் வழிநடத்த, முன்னா என்பவன் உதவி செய்கிறான். சாயித் உயிர் பிழைக்கிறான்.

முந்தைய பாகத்தின் இறுதியில், ஸ்டீபன் கேரளத்தை விட்டு வெளியேறி சில ஆண்டுகளுக்குப் பிறகு, முதலமைச்சர் ஜத்தின் இராம்தாஸ் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். அவர் திடீரென தனது கட்சியான ஐ.யு.எஃப்-லிருந்து பிரிந்து, ஐ.யு.எஃப் (பி.கே.ஆர்) என்ற புதிய பிரிவை உருவாக்கி, அகண்ட சக்தி மோர்ச்சா (ஏ.எஸ்.எம்) கட்சியுடன் கூட்டணி வைக்கிறார். ஏ.எஸ்.எம்-ன் தலைவர் வேறு யாருமல்ல, பாபா பஜ்ரங்கி என்ற பெயரில் செயல்படும் பல்ராஜ்தான். அவர்கள் கேரளாவைத் தங்கள் தன்னலத்திற்காகப் பயன்படுத்தத் திட்டமிடுகின்றனர். இதற்கிடையில், கோவர்தன் என்பவர், அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் ஜத்தினின் வளர்ப்பு அண்ணன் ஸ்டீபனைத் தேடத் தொடங்குகிறார்.

பன்னாட்டளவில், ஸ்டீபன் தான் குரேஷி அப்ராம் என்ற பெயரில் இயங்குவது தெரியவருகிறது. ஸ்டீபன், தான் இறந்துபோனதாக ஒரு‌ போலிச் செய்தியைப் பரவவிடுகிறார்.

ஸ்டீபன் இறந்துவிட்டதாக நம்பப்படும் நிலையில், கேரள அரசியலில் குழப்பம் ஏற்படுகிறது. ஸ்டீபன் இரகசியமாக ஊர் திரும்பி, ஜதினை எதிர்த்து அரசியலில் ஈடுபடும் தன் தங்கை பிரியதர்ஷினியைக் காப்பாற்றுகிறார். அவரை முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட சம்மதிக்க வைக்கிறார். பின்னர் ஸ்டீபன், ஜத்தினைக் கடத்தி, பிரியா மீதான பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வைக்கிறார்.

பிரியா விடுவிக்கப்பட்டதும், ஸ்டீபனும் சாயித்தும், சாயித்தின் குடும்பம் கொல்லப்பட்ட அதே இடத்தில் பல்ராஜையும் முன்னாவையும் கொன்று, சாயித்தின் குடும்பம் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்குகின்றனர்.

நடிகர்கள்

[தொகு]

வரவு

[தொகு]

எம்புரான் அதன் தொடக்க நாளில் 22-24 கோடிகளை ஈட்டியது.[5] நான்கு நாட்களில் 200 கோடிகளை ஈட்டியது.[3]

வரவேற்பு

[தொகு]

இந்து தமிழ் திசை நாளிதழ் இத்திரைப்படத்தை விமர்சிக்கும் பொழுது, "இந்தியாவின் மதச்சார்பின்மை ஜனநாயகத்தை அரசியல் ஆதாயத்துக்காக அழிக்க நினைக்கும் அரசியல் வியாபாரிகளை ‘லெஃப்ட் அண்ட் ரைட்’ வெளுத்துத் தீர்க்கும் மாஸ் என்டர்டெயினர் திரைக்கதை" என்று எழுதினர்.[6] தினமணி நாளிதழ் இப்படத்திற்கு விமர்சனம் எழுதும் பொழுது, "இனி மலையாளத்தில் உருவாகும் பெரிய வணிக படங்கள் எம்புரானை முறியடிக்க வேண்டும் என்கிற எல்லையை வைப்பார்கள். கமர்சியல் படமாக இருந்தாலும் அதில் இன்று பேசப்பட வேண்டிய அரசியலைப் பதிவு செய்திருப்பதற்காக படத்தின் கதை, திரைக்கதை எழுத்தாளரான முரளி கோபிக்கு பாராட்டுகள்." என்று எழுதினர்.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. CBFC (6 March 2025). "Empuraan (Lucifer 2)". இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு. Retrieved 26 March 2025.
  2. "Rs 180 crore; The budget of Mohanlal and Prithviraj Sukumaran's Malayalam film L2 Empuraan; Producer Gokulam Gopalan Reveals!". www.pinkvilla.com (in ஆங்கிலம்). Retrieved 2025-03-28.
  3. 3.0 3.1 "L2 Empuraan Day 4 Box Office: Mohanlal film cements its top grosser spot with Rs 200 crore worldwide gross; Fastest Malayalam film to reach this remarkable feat!". Mathrubhumi (in ஆங்கிலம்). 30 March 2025. Retrieved 30 March 2025.
  4. "Empuraan villain mystery solved and you it's not what you were thinking". The Economic Times. 2025-03-27. பன்னாட்டுத் தர தொடர் எண்:0013-0389. https://economictimes.indiatimes.com/news/new-updates/empuraan-villain-mystery-solved-and-you-its-not-what-you-were-thinking/articleshow/119578848.cms?from=mdr. 
  5. Gaur, Trisha (2025-03-27). "L2: Empuraan Box Office Collection Day 1 (Early Trends): Mohanlal Surpasses Entire Lifetime Earnings Of Every Single Malayalam Film Of 2025 Except 2!". Koimoi (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-03-27.
  6. "எம்புரான்: திரை விமர்சனம்". Hindu Tamil Thisai. 2025-03-29. Retrieved 2025-03-31.
  7. சிவசங்கர் (2025-03-27). "காட்சிகளில் பிரம்மாண்டம்.. ஆனால்! எம்புரான் - திரை விமர்சனம்!". Dinamani. Retrieved 2025-03-31.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்2:_எம்புரான்&oldid=4286764" இலிருந்து மீள்விக்கப்பட்டது