உள்ளடக்கத்துக்குச் செல்

எல். வெங்கடகிருட்டிண ஐயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எல். வெங்கடகிருட்டிண ஐயர்
L.Venkatakrishna Iyer
பிறப்புஇந்தியா
இறப்புஇந்தியா
பணிகட்டிடப் பொறியாளர்
அறியப்படுவதுபோலாவரம் திட்டம்
விருதுகள்பத்ம பூசண்

எல்.வெங்கடகிருட்டிண ஐயர் (L. Venkatakrishna Iyer) என்பவர் ஓர் இந்திய கட்டடவியல் பொறியாளர் ஆவார். தமிழகத்தின் பொதுப்பணித்துறையில் முதன்மைப் பொறியாளராக இவர் பணிபுரிந்தார் [1]. 1941 ஆம் ஆண்டு போலாவரத்திற்கு அருகில் கோதாவரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு முதன் முதலில் திட்டம் வகுத்துத் தந்த பெருமை அய்யருக்கு உண்டு. பின்னாளில் இத்திட்டம் போலாவரம் திட்டம் என அங்கீகரிக்கப்பட்டது [2]. கிருட்டிண அய்யர் கும்பகோணம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவராவார் [3]. மெட்ராசு தொழில்நுட்ப நிறுவனம் தொடங்குவதில் சின்னசாமி ராசம்மிற்கு துணை நின்றவர்களில் இவரும் ஒருவராவார். நிறுவனத்தின் மையக் குழுவில் ஒரு உறுப்பினராக அமர்ந்து அய்யர் கல்வி நிறுவனத்தின் நிருவாகத்தையும் மேற்பார்வை செய்தார் [4]. சமூகத்திற்கு இவர் செய்த தொண்டுகளை கருத்திற்கொண்டு 1961 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் மூன்றாவது உயரிய குடிமக்கள் விருதான பத்ம பூசண் விருதை வழங்கி இவரைச் சிறப்பித்தது.[5].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Our own MIT". Madras Musings. March 2014. Retrieved July 7, 2016.
  2. Biksham Gujja (2006). Perspectives on Polavaram, a Major Irrigation Project on Godavari. Academic Foundation. pp. 27–. ISBN 978-81-7188-578-7.
  3. "150 years in the service of education". The Hindu. 29 January 2014. Retrieved July 7, 2016.
  4. "History". Madras Institute of Technology. 2016. Retrieved July 7, 2016.
  5. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on November 15, 2014. Retrieved January 3, 2016. {{cite web}}: Unknown parameter |= ignored (help)