எல். பாலராமன்
Appearance
இல. பாலராமன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1967, 1984 மற்றும் 1989 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில், வந்தவாசி தொகுதியில் இருந்து, இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு, இந்திய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் 1996ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், தமிழ் மாநிலா காங்கிரசு (மூப்பனார்) கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டார். இவா் வேலூர் மாவட்டம் மோட்டுபாளையம் கிராமத்தில் பிறந்தார். இது வேலூர் நகரம் அருகில் உள்ளது. இவர் நிலஉரிமையாளரான வரதா கவுண்டரின் பேரன் ஆவார்.[1]