எல். சங்கர்
எல். சங்கர் | |
---|---|
![]() | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | சங்கர் இலட்சுமிநாராயணா |
பிறப்பு | 26 ஏப்ரல் 1950 சென்னை, இந்தியா |
பிறப்பிடம் | இந்தியா |
இசை வடிவங்கள் |
|
தொழில்(கள்) |
|
இசைக்கருவி(கள்) |
|
இசைத்துறையில் | 1960s–தற்போது வரை |
இணையதளம் | lshankar |
சங்கர் லட்சுமிநாராயணா (Shankar Lakshminarayana) (பிறப்பு 26 ஏப்ரல் 1950),[1] எல். சங்கர் என்றும் அழைக்கப்படும் இவர்[2], வயலின் கலைஞரும், பாடகரும் மற்றும் இசையமைப்பாளரும் ஆவார்.[3]
இளமை வாழ்க்கை
[தொகு]இந்தியாவின் சென்னையில் பிறந்த சங்கர், இலங்கையில் வளர்ந்தார். அங்கு வயலின் கலைஞரும் பாடகருமான இவரது தந்தை வை. லட்சுமிநாராயணா யாழ்ப்பாண இசைக் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார்.[4][5] தந்தையிடம் வயலின் வாசிக்கக் கற்றுக் கொண்ட இவர், தனது ஏழு வயதில் இலங்கைக் கோயிலில் முதன்முதலில் பொதுவெளியில் பாடினார்.[5]
1969 ஆம் ஆண்டில், சங்கர் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குச் சென்றார். அங்கு வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் இன இசைவியல் படித்தார்.[6]
தொழில் வாழ்க்கை
[தொகு]பல ஆண்டுகளாக பல்வேறு இந்திய பாடகர்களுடன் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்திய பிறகு, சங்கர் தனது சகோதரர்களான எல். வைத்தியநாதன் மற்றும் எல். சுப்பிரமணியம் ஆகியோருடன் இணைந்து இந்தியா முழுவதும் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்.
வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் கல்லூரியில் பயின்றபோது, ஆர்னெட் கோல்மேன், ஜிம்மி கேரிசன் மற்றும் ஜான் மெக்லாலின் போன்ற ஜாஸ் இசைக்கலைஞர்களை சந்தித்தார்.[6] பின்னர், ஜான் மெக்லாலினுடன் இணைந்து சேர்ந்து சக்தி என்ற இசைக் குழுவை 1975 ஆம் ஆண்டில் நிறுவினார்.[7] இவர்கள் சக்தி (1975), எ ஹேண்ட்புல் ஆஃப் பியூட்டி (1976) மற்றும் நேச்சுரல் எலிமென்ட்ஸ் (1977) என மூன்று இசைத் தொகுப்புகளை வெளியிட்டனர் .
இசைக்குழு கலைக்கப்பட்ட பிறகு, சங்கர் சிறிது காலத்திற்கு பிராங்க் சப்பாவிடம் வயலின் கலைஞராக இருந்தார், பின்னர் தி எபிடெமிக்ஸ் என்ற குழுவை நிறுவி, ஒரு இசைக்குழுத் தலைவராக பல இசைத் தொகுப்புகளை வெளியிட்டார்.[6] பீட்டர் கேப்ரியலுடன் இணைந்து, தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் கிறிஸ்ட் (1989) திரைப்படத்திற்கான ஒலிப்பதிவின் ஒரு பகுதியை எழுதினார். இதற்காக இவர் கிராமி விருதைப் பெற்றார்.[6] அடுத்த ஆண்டுகளில், சங்கர் கேப்ரியலின் பல தொகுப்புகளில் பணியாற்றினார். 1996 முதல், வயலின் கலைஞர் ஜிஞ்சர் சங்கருடன் (எல். சுப்பிரமணியத்தின் மகள்) சங்கர் & ஜிஞ்சர் இரட்டையர்களாக பணியாற்றி வருகிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Colin Larkin (writer), ed. (1992). The Guinness Who's Who of Jazz (First ed.). கின்னஸ் உலக சாதனைகள். p. 356. ISBN 0-85112-580-8.
- ↑ Ferreira, Verus (14 November 2014). ""The double necked violin has a full orchestral range"". Music Unplugged. https://www.musicunplugged.in/interviews/interviews_info/27/0.
- ↑ Underwood, Lee (November 2, 1978). "Profile: L.Shankar". Retrieved 15 Dec 2021.
- ↑ Colin Larkin (writer), ed. (1992). The Guinness Who's Who of Jazz (First ed.). கின்னஸ் உலக சாதனைகள். p. 356. ISBN 0-85112-580-8.Colin Larkin (writer), ed.
- ↑ 5.0 5.1 "L. Shankar - Singer, Violinist, Composer, and Producer". lshankar.com. Retrieved 2020-11-21.
- ↑ 6.0 6.1 6.2 6.3 Colin Larkin, ed. (1992). The Guinness Who's Who of Jazz (First ed.). கின்னஸ் உலக சாதனைகள். p. 356. ISBN 0-85112-580-8.Colin Larkin, ed.
- ↑ "38th Annual GRAMMY Awards". grammy.com. Retrieved 15 September 2024.