உள்ளடக்கத்துக்குச் செல்

எல். கிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எல். கிருஷ்ணன் என அழைக்கப்படும் டான் சிறீ லட்சுமணன் கிருஷ்ணன் (Lakshmanan Krishnan, 21 அக்டோபர் 1922 – 24 செப்டெம்பர் 2026) மலேசியத் திரைப்பட இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

கிருஷ்ணன் 1922 அக்டோபர் 21 அன்று பிரித்தானிய இந்தியாவின் சென்னையில் பிறந்து, மலேசியாவின் பினாங்கில் வளர்ந்தார். 1947-இல், இவர் சென்னையில் உள்ள கலைவாணி பிலிம்சில் உதவித் திரைப்பட இயக்குநரானார். கிருஷ்ணன் 1949-இல் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தார்,[2] அங்கு ஷா கலையகத்தில் திரைப்பட இயக்குநரானார். 11 ஆண்டுகளுக்குப் பிறகு, கிருஷ்ணன் கோலாலம்பூருக்கு குடிபெயர்ந்தார், அங்கு மெர்தேக்கா கலையகத்தில் தனது தொழிலைத் தொடர்ந்தார். 1963-இல், சொந்தமாக தொழில் தொடங்கினார்.

30-இற்கும் மேற்பட்ட மலாயத் திரைப்படங்களை இயக்கிய தனது தொழில் வாழ்க்கை முழுவதும்[2], உள்ளூர்த் திரைப்படத் துறையில் புகழ்பெற்றவர்களாக மாறிய பல முக்கிய நபர்களின் வாழ்க்கையை அவர் வெற்றிகரமாகத் தொடங்கி வைத்தார். அவர்களில் பி. ராம்லீ, மரியா மெனாடோ, கஸ்மா பூட்டி, முஸ்தபா மரோஃப், எம். அமீன், லதிஃபா உமர், ரோசுனானி சமீல் ஆகியோர் அடங்குவர்.

விருதுகள்

[தொகு]

2016 ஆம் ஆண்டில், பேராக் சுல்தான் நசுரின் சா, இவருக்கு பேராக்கின் "டோகோ மெர்டேகா" என்ற பட்டத்தை வழங்கினார்.

இறப்பு

[தொகு]

இவரின் மனைவி தாய்லாந்தைச் சேர்ந்தவர். தனது இறுதிக் காலத்தில் தாய்லாந்தில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்த கிருஷ்ணன் சியாங் மாய் நகரில் 2026 செப்டம்பர் 24 அன்று தனது 103-ஆவது அகவையில் இறந்தார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்._கிருஷ்ணன்&oldid=4652331" இலிருந்து மீள்விக்கப்பட்டது