எல். கணேசன்
எல். கணேசன் | |
---|---|
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் | |
தொகுதி | திருச்சிராப்பள்ளி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 24 ஏப்ரல் 1934 கண்ணந்தங்குடி கீழையூர்,தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
அரசியல் கட்சி | திமுக |
வாழ்க்கை துணைவர்(கள்) | கமலா |
பிள்ளைகள் | 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் |
இருப்பிடம் | தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா |
As of செப்டம்பர் 22, 2006 Source: [1] |
எல். கணேசன்(பிறப்பு 24 ஏப்ரல் 1934) பதினான்காம் இந்திய நாடாளுமன்றத்தின் திருச்சிராப்பள்ளியிலிருந்து மதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராவார்.[1]
பிறப்பு[தொகு]
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி கீழையூர் கிராமத்தில் 24-04-1934ல் பிறந்தார்.
வகித்த பொறுப்புகள்[தொகு]
சட்டமன்ற உறுப்பினர்[தொகு]
1971, 1989 ஆகிய இருமுறை ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, 1989ல் முதல்வரின் பேரவை செயலாளராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினர்[தொகு]
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தி.மு.க.வின் சார்பில் 1980 சூன் 30 ஆம் நாள் முதல் 1986 ஏப்ரல் 10 ஆம் நாள் வரை பணியாற்றினார்.,
சட்டமேலவை உறுப்பினர்[தொகு]
ஒருமுறை தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக மக்கள் பணியாற்றி உள்ளார்.
இடம்பெற்ற கட்சிகள்[தொகு]
1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தளகர்த்தர்களில் முதன்மையானவர்.1971ல் திமுகவின் மாநில மாணவரணி செயலாளராக பணியாற்றியுள்ளார்.1993ல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்உருவானபோது இவர் அதன் அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது திமுகவில் இணைந்து தேர்தல் பணிக்குழு செயலாளராக பணியாற்றி வருகிறார்.
2008 ஆம் ஆண்டு சூலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்த பின்னர் இவர் மதிமுக கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "L. Ganesan explains BJP’s poll strategy". தி இந்து. 26 June 2008. Archived from the original on 28 ஜூன் 2008. https://web.archive.org/web/20080628233828/http://www.hindu.com/2008/06/26/stories/2008062654050400.htm. பார்த்த நாள்: 24 August 2011.
- ↑ "MDMK leadership expels Ganesan, Gingee Ramachandran". 2008-07-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-03-15 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|=
ignored (உதவி)
வெளியிணைப்புகள்[தொகு]
- 1934 பிறப்புகள்
- வாழும் நபர்கள்
- நாடாளுமன்ற தி. மு. க. உறுப்பினர்கள்
- 14வது மக்களவை உறுப்பினர்கள்
- தஞ்சாவூர் மாவட்ட நபர்கள்
- தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள்
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்
- மாநிலங்களவை உறுப்பினர்கள்
- தமிழக அரசியல்வாதிகள்
- தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள்