எல்லோரும் நல்லவரே
| எல்லோரும் நல்லவரே | |
|---|---|
![]() சுவரொட்டி | |
| இயக்கம் | எஸ். எஸ். பாலன் |
| தயாரிப்பு | எஸ். எஸ். பாலன் |
| திரைக்கதை | எஸ். சித்தலிங்கையா |
| இசை | வி. குமார் (தமிழ்/தெலுங்கு) ரவீந்திர ஜெயின் (இந்தி) |
| நடிப்பு | ஆர். முத்துராமன் மஞ்சுளா விஜயகுமார் ஜெயந்தி |
| கலையகம் | ஜெமினி ஸ்டூடியோஸ் |
| வெளியீடு | 11 ஏப்ரல் 1975 |
| நாடு | இந்தியா |
| மொழி |
|
எல்லோரும் நல்லவரே (Ellorum Nallavare) என்பது 1975 ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். இதனை ஜெமினி ஸ்டூடியோஸ் சார்பில் எஸ். எஸ். பாலன் இயக்கி தயாரித்தார். இப்படம் 1974 ஆம் ஆண்டு வெளியான கன்னடத் திரைப்படமான பூதய்யன மகா அய்யு என்ற படத்தின் மறு ஆக்கமாகும்.[1] [1], இது ஒரே நேரத்தில் தெலுங்கில் அந்தரூ மஞ்சிவாரே என்றும் இந்தியில் ஏக் காவ்ன் கி கஹானி என்ற பெயரிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டது. தெலுங்குப் பதிப்பைத் தவிர, மற்ற பதிப்புகள் வணிக ரீதியாக படுதோல்வியைச் சந்தித்தன; இதுவே அந்த தயாரிப்பு நிறுவனத்தின் வீழ்ச்சிக்கும் வழிவகுத்தது.
கதை
[தொகு]இந்தக் கதைக்களமானது, வட்டிக்கு பணம் கொடுத்து, கிராம மக்களின் சொத்துக்களை அபகரிப்பவரான தர்மலிங்கம் மற்றும் மனம் திருந்திய அவரது மகன் நாகப்பன், அந்த வட்டிக்கு பணம் கொடுக்கும் தர்மலிங்கத்தாலும் அவரின் மகன் நாகப்பனாலும் பாதிக்கப்பட்ட நல்ல மனிதரான கந்தன், அவர்களுக்கு இடையே தோன்றும் பகை, அதனுடன் இணைந்த ஒரு காதல், இரக்கமற்ற இயற்கைச் சீற்றம், தீமைக்குக் கிடைக்கும் கொடூரமான விளைவு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
நடிகர்கள்
[தொகு]| நடிகர்கள் (தமிழ்) | நடிகர்கள் (தெலுங்கு) | நடிகர்கள் (இந்தி) | பாத்திரம் |
|---|---|---|---|
| ஆர். முத்துராமன் | சோபன் பாபு | ராகேஷ் பாண்டே | |
| லோகேஷ் | |||
| மஞ்சுளா | |||
| ஜெயந்தி | ஜெயஸ்ரீ கட்கர் | ||
- தமிழ்
- வி. எஸ். ராகவன்
- தர்மலிங்கமாக மேஜர் சுந்தரராஜன்
- தெலுங்கு
- வெங்கையாவாக துளிபாலா
- தியாகராஜு
- கே.வி.சலம்
- நிர்மலா
- இந்தி
- ஜீவன்
- சி. எஸ். துபே
- மோகன் சோட்டி
- பீர்பால்
- பிரம்மச்சாரி
- நசீர் உசேன்
தயாரிப்பு
[தொகு]எல்லோரும் நல்லவரே திரைப்படத்தை எஸ். எஸ். பாலன் தயாரித்து இயக்கினார்.[2][3] இது ஜெமினி ஸ்டுடியோஸ் பதாகையின் கீழ் தயாரிக்கப்பட்ட கடைசி திரைப்படமாகும்.[4][5] இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்ட ஒரு மும்மொழித் திரைப்படமாகும்.[6] தெலுங்கில் அந்தரூ மஞ்சிவாரே என்றும்,[7] இந்தியில் ஏக் காவ்ன் கி கஹானி என்றும் பெயரிடப்பட்டது. [8] இப்படம் முழுவதும் கலசபுரா என்ற கிராமத்தில் படமாக்கப்பட்டது, படத்திற்காகவே அங்கு வீடுகள் கட்டப்பட்டன.
இசை
[தொகு]இப்படத்திற்கு வி. குமார் இசையமைத்தார்.[9][10]
| பாடல் | பாடகர்(கள்) | வரிகள் |
|---|---|---|
| "சிவப்புக்கல்" | டி. எம். சௌந்தரராஜன் | புலமைப்பித்தன் |
| பி. சுசீலா | ||
| "படைத்தானே பிரம்ம தேவன்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |
| "யம்மா கண்ணு" | ||
| "பகை கொண்ட உள்ளம்" | கே. ஜே. யேசுதாஸ் |
வரவேற்பு
[தொகு]எல்லோரும் நல்லவரே வணிக ரீதியாக படுதோல்வி அடைந்தது.[2][11] மேலும் ஜெமினி திரைப்பட நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.[12] இந்திப் பதிப்பான ஏக் காவ்ன் கி கஹானியும் வெற்றி பெறவில்லை, ஆனால் அதன் தெலுங்குப் பதிப்பு வெற்றி பெற்றது.[13] கல்கியைச் சேர்ந்த காந்தன், நடிகர்களின் நடிப்பையும், படக்குழுவினரையும் பாராட்டினார், குறிப்பாக வெள்ளக் காட்சியை ஒளிப்பதிவு செய்த விதத்தைப் பாராட்டினார், மேலும் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான எஸ். எஸ். பாலன், எஸ். எஸ். வாசனை நினைவூட்டுவதாகவும், இது ஒரு அற்புதமான வண்ணத் திரைப்படம் என்றும் பாராட்டினார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "பிளாஷ்பேக்: எதிர்பார்ப்பை புறக்கணித்து ஏமாற்றமளித்த "எல்லோரும் நல்லவரே"". தினமலர். 3 March 2025. Retrieved 2026-06-16.
- 1 2 Rajadhyaksha & Willemen 1998, ப. 99.
- ↑ Rajadhyaksha & Willemen 1998, ப. 594.
- ↑ "தேவரை தியேட்டருக்கு வரவழைத்த வாசன்! ( தமிழ்சினிமா முன்னோடிகள்: தொடர் -14)" (in ta). ஆனந்த விகடன். 2 November 2015 இம் மூலத்தில் இருந்து 28 February 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230228085829/https://www.vikatan.com/government-and-politics/politics/54532-.
- ↑ Pillai, Swarnavel Eswaran (2015). Madras Studios: Narrative, Genre and Ideology in Tamil Cinema. India: Sage Publications. p. 100. ISBN 978-93-5150-212-8.
- ↑ Dinamani (23 December 2014). "S S Balan was the doyen of Tamil journalism". Exchange4media இம் மூலத்தில் இருந்து 20 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180320070145/http://www.exchange4media.com/Print/S-S-Balan-was-the-doyen-of-Tamil-journalismK-Vaidiyanathan_58585.html.
- ↑ Bhaskar, Vijaya (14 January 2006). "1975 – The mother of all years". Idlebrain. Archived from the original on 20 October 2018. Retrieved 19 October 2018.
- ↑ "EK GAON KI KAHANI (1975)". British Film Institute. Archived from the original on 13 April 2018. Retrieved 13 April 2018.
- ↑ "Ellorum Nallavare". சரிகம. Archived from the original on 28 February 2018. Retrieved 27 February 2018.
- ↑ "BOLLYWOOD INDIAN Ellorum Nallavare P. SUSHEELA Sounderarajan 7" 45 RPM EMI Columbia EP 1975". ecrater. Archived from the original on 11 November 2022. Retrieved 11 November 2022.
- ↑ Raj, Michael (19 December 2017). "விகடன் எம்.டி பாலசுப்ரமணியம் காலமான தினமின்று ..." Nellai Times Now. Archived from the original on 13 April 2018. Retrieved 13 April 2018.
- ↑ Ashokamitran (2016). Fourteen Years with Boss. Penguin Books. p. 161. ISBN 978-0-14-342329-4.
- ↑ Kandavel, Sangeetha (24 November 2011). "Tamil director Gautham Vasudev Menon making India's first trilingual film". தி எகனாமிக் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 19 October 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181019122106/https://economictimes.indiatimes.com/industry/media/entertainment/tamil-director-gautham-vasudev-menon-making-indias-first-trilingual-film/articleshow/10851285.cms.
