எல்லையடி (துடுப்பாட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

துடுப்பாட்டத்தில், எல்லையடி (boundary) என்பது ஒரு ஆடுகளத்தின் சுற்றளவினைக் குறிக்கிறது . இது ஒரு சுற்றளவுக்கு அல்லது அதற்கு அப்பால் பந்து தாண்டிச் செல்லும் போது வழங்கப்படும் ஓட்டத்தினைக் குறிக்கும் சொல் ஆகும்.

புலத்தின் விளிம்பு[தொகு]

எல்லையடி என்பது ஆடுகளத்தின் விளிம்பு, அல்லது களத்தில் உள்ள பொருளின் (பெரும்பாலும் ஒரு கயிறு) விளிம்பைக் குறிக்கும். 2000 களின் முற்பகுதியில் இருந்து, தொழில்முறை போட்டிகளின் எல்லைகள் பெரும்பாலும் விளம்பரதார சின்னங்களின் இலச்சினைகளைக் கொண்ட கயிறாக உள்ளது.

பாரம்பரியமாக எல்லையடியில் பயன்படுத்தப்படும் கயிறு

நான்கு ரன்கள்[தொகு]

எல்லையடியில் உள்ள கயிறின் விளிம்பைத் தொடுவதற்கு அல்லது செல்வதற்கு முன், பந்து குதித்துச் சென்றாலோ, அல்லது தரையில் உருண்டு சென்று கோட்டினைத் தாண்டினாலோ நாலடி ஓட்டங்கள் கொடுக்கப்படும்.

ஒரு களத்தடுப்பாளர் பந்தைப் பிடித்து பந்துவீச்சாளரிடமோ அல்லது இலக்குக் கவனிப்பாளரிடம் பந்தினை எறியும் போது எதிர்ப் பக்கத்தில் களத்தடுப்பாளர்கள் பந்தினைப் பிடிக்கத் தவறி அது எல்லையடியினைத் தாண்டினாலும் அதற்கும் நாலடி ஓட்டங்கள் வழங்கப்படும். அதற்கு முன்னதாக மட்டையாளர் ஓடி எடுத்த ஓட்டங்களுடன் இந்த நாலடி ஓட்டங்களும் சேர்க்கப்படும். ஆனால் அந்த நாலடி ஓட்டங்களானது உதிரிகளாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

ஆறடி ஓட்டம்[தொகு]

எல்லையடியில் உள்ள கயிறின் விளிம்பை தரையில் படாமல் தாண்டினால் ஆறடி ஓட்டங்கள் வழங்கப்படும். [1]

1910 க்கு முன்னர், மைதானத்திற்கு வெளியே பந்து சென்றால் மட்டுமே ஆறடி வழங்கப்பட்டு வந்தது.[2] எல்லையடினைத் தாண்டினால் ஐந்து ஓட்டங்கள் மட்டுமே வழங்கப்பட்டது.[3]

சாதனைகள்[தொகு]

ஆறடி[தொகு]

ஒருநாள் போட்டிகளில் அதிக ஆறடிகள் அடித்து உலக சாதனை படைத்த சாஹித் அப்ரிடி.

ஓர் ஆட்டப் பகுதியில் அதிக ஆரடி ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ம் சாதனையினை பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் பன்முக வீரர் வாசிம் அக்ரம் படைத்தார். 1996 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 12 ஆறடி ஓட்டங்கள் எடுத்து இந்தச் சாதனையினைப் படைத்தார்.

ஓல்ட் டிராஃபோர்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 17 ஆறடிகளை எடுத்த இயான் மோர்கன், ஒருநாள் சர்வதேசபோட்டிகளில் அதிக ஆறடிகள் எடுத்தவர் எனும் சாதனையினை ஜூன் 18,2019 அன்று படைத்தார். பிரெண்டன் மெக்கல்லம் தற்போது தேர்வு போட்டிகளில் அதிக ஆறடிகள் (107) எடுத்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். [4] ஷாஹித் அப்ரிடி ஒருநாள் போட்டிகளில் அதிக ஆறடிகள் எடுத்தவர் சாதனையைப் படைத்துள்ளார் (398 போட்டிகளில் 351, 369 ஆட்டப்பகுதி). [5]

மேற்கோள்கள்[தொகு]