எல்லைகளற்ற பொறியியலாளர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எல்லைகளற்ற பொறியியலாளர்கள் (Engineers Without Borders) இலாப நோக்கமற்ற, உலகளாவிய முன்னேற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்ட அரச சார்பற்ற அமைப்பு ஆகும். பொதுவாக இவை தன்னார்வலர் குழுக்களே ஆகும். எல்லைகளற்ற பொறியியலாளர்கள் கனடாவே இவற்றுள் பெரியதும் முன்னோடியானதும் எனலாம்.

பொதுவாக இவ்வமைப்பு பொறியியல் மாணவர்களை உறுப்பினர்களாக கொண்டு, அடித்தள நிலையில் (grass roots) இயங்குகின்றது. தற்சமயம் இவர்கள் பொதுவாக அடிப்படை வசதிகளை அமைக்க உதவும் தகுதொழில்நுட்பங்களிலேயே தங்களது கவனத்தைச் செலுத்தி வருகின்றார்கள்.