உள்ளடக்கத்துக்குச் செல்

எல்லி அவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எல்லி அவரம்
2013-ஆம் ஆண்டில் எல்லி
பிறப்பு29 சூலை 1989 (1989-07-29) (அகவை 35)[1]
ஸ்டோக்ஹோல்ம், ஸ்வீடன்
தேசியம்ஸ்வீடிஷ்
மற்ற பெயர்கள்எலிசபெத் அவரமிது
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2008–தற்பொழுது
அறியப்படுவதுபிக் பாஸ் 7

எல்லி அவரம் என்ற பெயரில் பணிப்புரியும் எலிசபெத் அவரமிது க்ரானிலுன்ட் (பிறப்பு 29 ஜூலை 1989)[2][3] ஓர் சுவீடன் கிரேக்க நடிகை.[4] அவர் தற்பொழுது இந்தியாவில் உள்ள மும்பை நகரில் வசித்து வருகிறார். "மிக்கி வைரஸ்" எனப்படும் இந்தி படத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றவர்.[5] மேலும், பிக் பாஸ் எனும் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.[6]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

ஸ்வீடன் நாட்டில் உள்ள ஸ்டோக்ஹோல்ம் நகரில், ஜன்னிஸ் அவரமிடிஸ் எனும் கிரேக்க இசையமைப்பாளருக்கு, மரியா க்ரானிலுந்து எனும் நடிகைக்கும் பிறந்தவரே எல்லி அவரம். அவருக்கு கொன்ஸ்டான்டின் அவரமிடிஸ் எனும் சகோதரர் உள்ளார்.

தொழில் வாழ்க்கை

[தொகு]

தனது பதினேழாம் வயதில், சுண்டிபெர்க் எனும் இடத்தில் "பரதேசி நடன குழுமம்" ஒன்றினில் உறுப்பினர் ஆனார் அவரம். மேலும், ஸ்காண்டிநேவியா முழுதும் பாலிவுட் பாடல்களுக்கு நடனமாடினார்.[7] 2010-ஆம் ஆண்டு மிஸ் கிரீஸ் அழகி போட்டியில் பங்கேற்றார்.[8]

2012-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், மும்பை நகருக்கு புலம்பெயர்ந்தார் அவரம்.[9] எவெரெடி பாட்டெரிஸ் நிறுவனத்தின் தொலைக்காட்சி விளம்பரத்தில் முதலில் தோன்றினார்.[10]

சவுரப் வர்மா இயக்கத்தில் வெளிவந்த மிக்கி வைரஸ் எனப்படும் நகைச்சுவை திரில்லர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.[4][11] இப்படத்தில் அறிமுகமாகும் முன்னரே, ஹிந்தி உச்சரிப்பில் பயிற்சி மேற்கொண்டிருந்தார்.[12] இப்படத்தில் கமாயினி ஜார்ஜ் எனும் வேடத்தில் நடித்திருந்தார்.[13] 2013-ஆம் ஆண்டு பிக் பாஸ் 7 எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், பத்து வாரங்கள் தாக்குப்பிடித்து எழுபதாம் நாளில் அந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். 2015-ஆம் ஆண்டு வெளிவந்த "கிஸ் கிசுகோ பியார் கரூன்" எனும் படத்தில் நகைச்சுவை நடிகர் கபில் ஷர்மாவுடன் தீபிகா எனும் வேடத்தில் ஜோடி சேர்ந்தார்.

திரைப்படங்கள்

[தொகு]
  • 2008 Förbjuden Frukt எனும் படத்தில் செலென் எனும் வேடம் (ஸ்வீடிஷ் மொழி)
  • 2013 மிக்கி வைரஸ் எனும் படத்தில் கமயனி ஜார்ஜ் எனும் வேடம் (ஹிந்தி மொழி)
  • 2015 கிஸ் கிசுகோ பியார் கரூன் எனும் படத்தில் தீபிகா எனும் வேடம் (ஹிந்தி மொழி)

தொலைக்காட்சியில்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Twitter / ElliAvram: @TeamManishPaul thank uu God bless u!". Twitter.com. 2013-07-28. Retrieved 2014-04-01.
  2. "Elli Avram turns 26, glad that she shares birthday with Sanjay Dutt". Twitter.com. Retrieved 2014-04-01.
  3. Colors TV. "Bigg Boss - 25th October 2013 - Full Episode (HD)". YouTube. Retrieved 2014-04-01.
  4. 4.0 4.1 De Villiers, Pierre. "Swedish actress Elli Avram is breaking new ground - by starring in an upcoming hollywood film". Norwegian Air Shuttle ASA. Retrieved 29 September 2013.
  5. "Elli Avram meets her parents on Bigg Boss 7 - The Times of India". Articles.timesofindia.indiatimes.com. 2013-10-28. Archived from the original on 2013-11-03. Retrieved 2014-04-01. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  6. Goyal, Divya (September 17, 2013). "'Bigg Boss 7' complete list of contestants". The Indian Express. http://www.indianexpress.com/news/bigg-boss-7-complete-list-of-contestants/1169462/. பார்த்த நாள்: 1 October 2013. 
  7. Follo. "Elli Avram training for Bollywood". Retrieved 2015-08-27.
  8. "Katrina Kaif has a twin in Bigg Boss 7 contestant Elli Avram!". FILMS OF INDIA. Archived from the original on 23 செப்டம்பர் 2013. Retrieved 29 September 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  9. "Spot the difference: Elli Avram and Katrina Kaif". Living Media India Limited. Retrieved 29 September 2013.
  10. "Elli Avram Biography". Greynium Information Technologies Pvt. Ltd. Archived from the original on 21 செப்டம்பர் 2013. Retrieved 29 September 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. "Mickey Virus - Mickey Virus Overview". Contests2win.com India Pvt. Ltd. Retrieved 29 September 2013.
  12. Mankermi, Shivani (August 31, 2013). "Bollywood gets ready to unleash a new stock of hotties". Living Media India Limited/Mail Today. Retrieved 29 September 2013.
  13. "Mickey Virus (2013)". IMDb.com, Inc. Retrieved 29 September 2013.
  14. "Teen ka Tadka Special on Jhalak: Recap Episode 25". aapkacolors.com. Archived from the original on 2018-09-10. Retrieved 2016-06-02.

வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Elli Avram
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்லி_அவரம்&oldid=4152767" இலிருந்து மீள்விக்கப்பட்டது