எல்லா வெடிகுண்டுகளினதும் தந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எல்லா வெடிகுண்டுகளின் பிதா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
எல்லா வெடிகுண்டுகளின் பிதா
"The Father of All Bombs" (FOAB)
Abvp.svg
வரைபடம்
வகைவெப்ப அழுத்த வெற்றிட வெடிகுண்டு
அமைக்கப்பட்ட நாடு உருசியா
பயன்பாடு வரலாறு
பயன் படுத்தியவர்உருசிய வான்படை
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பாளர்உருசியக் கூட்டரசின் ஆயுதப் படைகள்
உருவாக்கியது2007
எண்ணிக்கை100
அளவீடுகள்
எடை7,100கிகி/7.1 மெட்ரிக் டன் (15,650 பவுண்டு./7.8+ டன்)

வெடிபொருள், நுண்ணிய அலுமினியத் துகள் மற்றும் எதிலீன் ஒட்சைட்டு கலவை.
வெடிப்பின் விளைவு44 டன் டிஎன்டி (பெருவிசை வெடி மருந்து)/ 80,000 பவுண்டு

"எல்லா வெடிகுண்டுகளின் பிதா" ("Father of All Bombs") என்ற அடை பெயருடைய சக்தி அதிகரிக்கப்பட்ட வான்வியல் வெப்ப அழுத்த வெடிகுண்டு (Aviation Thermobaric Bomb of Increased Power) என்பது வான்வழியாக குண்டு வீச்சு விமானங்கள் மூலம் தரையின் செயற்படும் உரசியத் தயாரிப்பு வெப்ப அழுத்த ஆயுதமாகும். இவ்வாயுதத்தின் அழிவு சக்தி பற்றி் குறிப்பிட்ட உருசியக் ஆயுதப் படைகளின் அதிகாரி "உயிர்வாழும் அனைத்துமே சாதாரணமாய் ஆவியாகிவிடும்" என்றார்.[1] இது அமெரிக்க இராணுவத்தின் "எல்லா வெடிகுண்டுகளின் தாய்" என அழைக்கப்படும் வெடிகுண்டினைவிட நான்கு மடங்கு பலமுள்ளது. இதனால் இது வழக்கமான, அணு ஆயுதங்களற்ற உலகிலுள்ள ஆயுதங்களில் இதுவே மிகச் சக்தி வாய்ந்த ஆயுதமாகும்.[2] ஆயினும், உரசியர்களின் உரிமை கொண்டாடும் ஆயுதத்தின் அளவு, சக்தி பற்றி அமெரிக்க பாதுகாப்பு ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.[3]

இவ்வாயுதம் 11 செப்டம்பர் 2007 அன்று வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.[4] உரசிய இராணுவத்தின் கூற்றின்படி, இப்புதிய ஆயுதம் சில சிறிய வகை அணுக்குண்டுகளுக்கு மாற்றீடாக அமையும்.[5]

இவற்றையும் பார்க்க[தொகு]

குறிப்புக்கள்[தொகு]

  1. Adrian Blomfield (2007-09-13). "Russian army 'tests the father of all bombs'". London: Daily Telegraph. http://www.telegraph.co.uk/news/main.jhtml?xml=/news/2007/09/12/wbomb112.xml. பார்த்த நாள்: 2008-01-05. 
  2. Luke Harding (2007-09-12). "Russia unveils the 'father of all bombs'". London: Guardian Unlimited. http://www.guardian.co.uk/russia/article/0,,2167175,00.html. பார்த்த நாள்: 2007-09-12. 
  3. "Did Russia Stage the Father of All Bombs Hoax?". Wired.com. October 4, 2007. Archived from the original on 2012-09-17. https://archive.is/FQM2. பார்த்த நாள்: 2007-10-04. 
  4. Илья Kрамник (2007-09-12). "Кузькин отец" (in Russian). Lenta.Ru. http://www.lenta.ru/articles/2007/09/12/bomb/. பார்த்த நாள்: 2007-09-12. 
  5. Russia tests `world's most powerful bomb Russia Today Retrieved on March 18, 1987