எல்ப்சு வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எல்ப்சு வினை (Elbs reaction) என்பது ஆர்த்தோ பதிலியிட்ட பென்சோபீனோனானது வெப்பச்சிதைவிற்கு உட்பட்டு குறுக்கப்பட்ட பல்வளைய அரோமேடிக் சேர்மத்தைத் தரும் கரிம வேதி வினையாகும். இந்த வினையானது இதன் கண்டுபிடிப்பாளரான செருமானிய வேதியியலாளர் கார்ல் எல்ப்ஸ் பெயரில் அழைக்கப்படுகிறது. இவர் தான் எல்ப்சு ஆக்சிசனேற்ற வினையையும் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் ஆவார். எல்ப்சு வேதிவினையானது 1884 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. [1][2][3]

இருப்பினும் எல்ப்சினால் வினையின் விளைபொருளைப் பற்றிய சரியான விளக்கத்தைத் தர முடியவில்லை. ஏனெனில் நாப்தலீனின் அமைப்பினைப் பற்றிய தெளிவான முடிவு அப்போது இருந்திருக்கவில்லை.

வாய்ப்பளவு[தொகு]

எல்ப்சின் வினையானது குறுக்கப்பட்ட அரோமேடிக் அமைப்புகளைத் தரவல்லதாக இருந்தது. 1884 ஆம் ஆண்டில் முன்னதாகவே எல்ப்சினால் செய்முறை விளக்கமளிக்கப்பட்டபடி நீர் நீக்க வினையின்படி ஆந்த்ரசீனைப் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதைவிட பெரிய அரோமேடிக் அமைப்புகளான பென்டாசீன் போன்றவற்றைப் பெறுவதற்கான வாய்ப்பும் இருந்தது. இந்த வினையானது ஒரு படியில் நிகழ்வதல்ல, ஆனால், முதல் படிநிலையில் இருஐதரோபென்னாசீன் உருவாக்கம் நிகழ்ந்து பின்னர் அது இரண்டாம் படிநிலையில் தாமிரத்தை வினைவேகமாற்றியாகப் பயன்படுத்தி ஐதரசன் நீக்கம் நிகழப்பெறுகிறது. [4]

Elbs reaction to anthracite and pentacene

இந்த வினைக்குத் தேவைப்படும் அசைல் சேர்மங்களானவை அலுமினியம் குளோரைடைப் பயன்படுத்தும் ப்ரீடல்-கிராப்ட்சு வினையின் மூலம் பெறப்படலாம்.[2][4]

மாறுபாடுகள்[தொகு]

எல்ப்சு வினையின் மூலமாக பல்லின வளையச் சேர்மங்களையும் தொகுக்க முடியும். 1956 ஆம் ஆண்டில் தயோபீனின் வழிப்பொருள் ஒன்று இவ்வினையைப் பயன்படுத்தித் தொகுக்கப்பட்டது. வினையின் முதல் இடைநிலைப் பொருள் உருவானவுடன் அது பல்வேறு தனிஉறுப்பு வினைப்படிகளைக் கொண்டிருந்ததால், வினைவழிமுறையல் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக, எதிர்பார்க்கப்பட்ட நேர்கோட்டு வடிவமுடைய விளைபொருளானது கிடைக்கப்பெறவில்லை.[5]

Heterocyclic Elbs reaction

மேற்கோள்கள்[தொகு]

  1. Karl Elbs, Einar Larsen. (1884). "Ueber Paraxylylphenylketon." Ber. Dtsch. Chem. Ges. (in German), 17(2): 2847–2849, எஆசு:10.1002/cber.188401702247.
  2. 2.0 2.1 K. Elbs. (1886) "Beiträge zur Kenntniss aromatischer Ketone. Erste Mittheilung." J. Prakt. Chem. (in German), 33(1): 180–188, எஆசு:10.1002/prac.18860330119.
  3. Fieser, Louis F. (1942). "The Elbs Reaction." Org. React., 1: 129-154, எஆசு:10.1002/0471264180.or001.06.
  4. 4.0 4.1 Eberhard Breitmaier, Günther Jung (2005). Organische Chemie: Grundlagen, Stoffklassen, Reaktionen, Konzepte, Molekülstrukturen (5th edition). Stuttgart: Georg Thieme Verlag, ISBN 978-3-13-541505-5.
  5. G. M. Badger, B. J. Christie. (1956). "Polynuclear heterocyclic systems. Part X. The elbs reaction with heterocyclic ketones." J. Chem. Soc. 1956: 3435–3437, எஆசு:10.1039/JR9560003435.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்ப்சு_வினை&oldid=2799642" இருந்து மீள்விக்கப்பட்டது